132 ||
அப்பாத்துரையம் - 1
போல் வடநாட்டில் என்றும் (முகலாயர் ஆட்சியில் கூட) நாம் கேள்விப்படவில்லை. எனவே வணிக வகுப்புத் தோன்றி வளர்ந்த பகுதி தமிழ் நாடேயாதலால் அச்சொல் தமிழேயாதல் வேண்டும்
என்க.
வணிகர் என்ற சொல்லின் பகுதி வண்மை என்பது. வேளாளர் நிலச் செல்வமிக்கவர், விருந்தோம்புவர். வணிகர் கலச் செல்வமிக்கவர், வண்மையால் வழங்குபவர்.
தமிழ்மக்களிடையே வணிகர் செழித்தோங்கியிருந்ததற்கு இருக்கு வேதமே சான்று பகரும். தமிழராகிய தஸ்யூக்கள் அந்நாள் நகர்களும் அரண்களும் துறைமுகங்களும் உடையவராயிந்தனர் என்றும், அவர்களிடையே வணிகர் பணிகர்
என்ற
வகையினர் இருந்தனர் என்றும் இருக்குவேதம் உரைக்கிறது. இவ்விடத்தில் பணி என்ற வடசொல்லின் பகரம் தமிழுக்குப் பொதுவான வல்லெழுத்துப் பகரமேயன்றி மெலிந்த பகரம் அன்று. வல்லெழுத்துப் பகரமும் வகரமும் தமிழில் போலியாக மாறும். வடமொழியில் மென் பகரம் அங்ஙனம் மாறும். ஆகவே முற்காலத்தில் பணி, பணிகர் என்றும் பின் வணிகர் என்றும் வழங்கிய சொற்கள் தமிழின் கிளைச் சொற்களேயாம் என்க.
ை
இன்றும் மலையாளத்தில் கைத்தொழில் முதலாளி வகுப்பினர் பணிக்கர் எனப்படுதல் காண்க.
நீர், மீன், கலை, நிலையம் ஆகிய சொற்கள் தமிழினின்று வடமொழி புக்கதெனத் தெளிவாக விளங்கும் சொற்களெனக் கால்டுவெல் காட்டியுள்ளனர். அவற்றின் பகுதி நீர்மை, மின்னுதல், கல் (கற்றல்),நில் என்பனவாம். அன்றியும் இவ்வகையைச் சேர்ந்த தமிழ்ச் சொல்லாம் அதனுடனொத்த புனல் தமிழ்ச் சொல்லாதலும் அதனுடன் தொடர்புடைய கனல், கனலுதல் ஆகியவற்றையும் காண்க.
மேற் கூறிய சொற்களுடன் சேர்த்தெண்ணத்தக்க ஆரிய தமிழ்ச் சொல் வலயம் ஆகும். வல் என்ற பகுதி ஆற்றலையும் வலம் ஆற்றலுடைய வலக்கை யையும் அதனால் படும் வெற்றியையும் கொடியையும் குறிக்கும். சுற்றி வருபவர் வலப்புறமாக வருவதால் வலம் சுற்றுதல் என்றும் வலயம் சுற்று என்றும் ஆயிற்று. இதன்