வளரும் தமிழ்
[133
ன்னொரு வடிவம் வளையம். உண்மையில் இது வளை என்ற பகுதியிலிருந்து வந்தது. வடமொழியில் இப்பொருட் சிறப்பு களின்றி இப்பெயர் இடு குறியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. (வெற்றியைக் குறிக்கும் சங்கின் வாய் வலப்புறமாயமைந்த தாதலின் அது வலம்புரியாயிற்று).
நட என்பதிலிருந்து நடனமும், நாடு என்பதிலிருந்து நாடகமும் நாட்டியமும் தோன்றின. வடமொழியில் இச்சிறப்புகள் இல்லாததோடு எல்லாம் நடனம் என்ற பொதுப் பொருளுடனேயே வழங்கின.
தாண்டவம் ஒருகால் ஒருகால்மீது தாண்டி நிற்கும் நிலைகுறிக்கும் தண்டம், தடி என்ற சொல்லுடன் இயைபுடையது. அதனால் அடித்துத் தண்டியதே தண்டனையின் முதற்படி ஆதலால் தண்டனை என்ற சொல்லும், ஆற்றலுடையவர் பாதுகாப்பில் சென்று பணிந்து பொருள் தருதல் தண்டம் வழங்கல் என்றும், பாதுகாப்பில் ஒருவன் தன்னை ஒப்புவித்தல் தண்டனிடுவதென்றும் வழங்கியது கவனிக்கத்தக்கது.
பசு, பாசம், பசுமை, பசை என்ற சொற்களும் நயம், நசை என்ற சொற்களும் நயப்பு, நைப்பு (நைப்பாசை) நெய், நெசவு என்பவற்றுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்க தமிழ்ச் சொற்கள். வடமொழியில் அவற்றுக்குப் பகுதியில்லை.
இவற்றைப்போலவே வீரம் என்ற சொல் வீறுடனும், திடம் என்பது திட்பம், திட்டம், திண்ணம் என்பவற்றுடனும் மாரணம், மாறு என்பதனுடனும், கேளிக்கை, கேலி, கேள், கேள்மை என்பவற்றுடனும் நானா (வகை) என்பது (நாலா) பக்கம் என்பதனுடனும் உறவுடைய தமிழ்ச் சொற்கள்.
பாலன் பால்குடி மாறாச் சிறு பருவத்தினன் என்ற கருத்தில் எழுந்தது.வால் என்பது வெண்மை. தூய்மைப் பொருளுடையது. இளங்குருத்தைக் குறிப்பாகக்கொண்டு இளமை குறித்தலால் வாலிபன் இளைஞனுக்கேற்ற சொல்லாயிற்று.
துண்டம் என்ற சொல் துண்டு என்ற தமிழ்ச் சொல்லேயாம். துணி என்ற வினையுடன் உறவுடையது. இதேபோல் பிண்டமும் தமிழ்ச்சொல்லேயாம். பிளவு பட்ட துண்டே பிண்டம். இதற்கு