அப்பாத்துரையம் - 1
(134) || எதிர்ச்சொல்லான அண்டம், அளைத்து என்ற பகுதியுடன்
யைபுடைய தமிழ்ச் சொல் ஆகும்.
சிந்தை,
வடமொழியில் கவலை ஆராய்ச்சி இவ்விரண்டையும் குறிக்கும், தமிழில் ஆராய்ச்சியைக் குறிக்கும் சிந்துதல், சிதறுதல் ஆகியவற்றுடன் இது தொடர்புடையது. செய்தியைப் பிரித்து அறியும் அறிவை இது குறிப்பதால் நல்ல தமிழ்ச் சொல்லேயாகும்.
சாரம், சாறு என்ற சொல்லுடனும் வாக்கு, வாசகம் வாய் என்ற சொல்லுட னும் சார்பு கொண்டவை. கலயம் கலத்தின் பிறிதொரு வடிவம். கலகம் கலவரம் என்ற தமிழ்ச் சொல்லைப் போல் கல என்ற பகுதியடியாகப் பிறந்தது.
கு என்பது வளைவு என்ற கருத்துடைய பகுதி. வடமொழி யிலும் இவ் விடைச் சொல் இப்பொருளில் வழங்குகிறதாயினும் அது அருகலான வழக்கே. அதனை ஒட்டிய சொற்கள் தமிழில் பெருவாரியானவை; சொல்லின் இன்றியமையாப் பகுதியானவை. வடமொழியில் இவ்விடை என்றும் தனித்துச் சொல் லுக்குப் புற அடையாகவே நிற்கிறது. (எ-டு) ரூபம் கு-ரூபம்; தர்க்கம் கு-தர்க்கம் என்பனபோல. தமிழில் குவை, குவி. குடம். குலை, குப்பம், குவடு, கும் முதல் ஆகிய சொற்களில் பிரிக்க முடியா அளவு சொல்லுடன் ஒன்றுபட்டுக்காணப்படுகிறது.ஆகவே, இவ்விடைச் சொல்லாகிய சொல்மூலம் தமிழே என்றல் தெளிவு.
இம் மூலத்தின் திரிபுகளுள் ஒன்றே குகை என்பது. இதன் இன்னொரு வடிவம் குவை. அறுகம் புல்லுக்கு வடமொழி யிலுள்ள பெயராகிய குசை என்பது கூட இதனுடன் தொடர்புடைய தமிழ்ச் சொல்லேயாயிருக்கக்கூடும். 'கு' என்னும்
டைச் சொல்லின் நெடிலுருவத்திலிருந்து கூர்மை, கூடு, கூவு முதலிய சொற்கள் தோன்றின. இச்சொற்களுடன் இணைப்பு உடையதே கூவல் என்பது. இதன் திரிபு கூவம், கூபம் என்றாம். இறுதி வடிவமே வடமொழியில் காணப்படுவது.வடமொழி புக்க தமிழ்ச் சொற்களுள் ஒன்றாகவே இதனைக் கொள்ளலாம்.
தமிழ் அல்லது திராவிடமொழிச் சார்புடையதாகக் கொள்ளக்கூடிய இன்னொரு சொல் சூடாமணி, ஆபாதசூடம் என்ற வடசொற்றொடர்களில் வரும் சூடா என்ற சொற்கள்