பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

135

ஆகும். வடமொழியில் இதன் பொருள் தலை என்பதாகும். தமிழில் தலையில் அணி என்ற பொருளுடைய சூடு என்ற சொல்லும், தெலுங்கில் முகங்கொண்டு பார் என்ற பொருளில் வரும் சூடு என்ற சொல்லும், இதனுடன் தொடர்புடையன. சுடிகை (பாம்பின் படமும்) இதனைச் சார்ந்த இன்னொரு சொல், தமிழில் தலை என்ற பொருளில் இது வழக்கிலிருந்திருக்கக் கூடும். வடமொழியில் இது பிற்கால வழக்கேயாதலாலும் இதன் சார்புச் சொற்களான தமிழ்ச் சொற்களும் பெரு வழக்காய்த் தொன்றுதொட்டு வழங்கி வருவதாலும் வடமொழிக்கினமான பிற மொழிகளில் இதன் சார்பான சொற்களின்மையாலும் இது திராவிடச் சொல்லேயாமெனத் தெளியலாம்.

காலம், கால் (ஒளி வீசு) என்ற மூலத்தை உடையது. ஒளிவீசும் கதிரவற் காகி அதன் மூலம் தெரியப்படும் காலத்துக்காயிற்று. கால் காற்றின் பெயருமாகி, காற்று என்ற சொல்லின் பகுதியுமாயிற்று.

ஒளியின் எதிர்மறையாகிய நிழலும் தமிழர் மரபில் ஒருவகை ஒளியாகவே கொள்ளப்பட்டதனால் இரண்டும் ஒன்றுக்கொன்று சொல் மாற்றாகத் தமிழில் வழங்கின. அதன் வழி நிழல் ஒளி எனப் பொருள்பட்டது போல, காலம், காளம், நிழல், கருமை எனப் பொருள்பட்டு கரிய உருவினளாகிய உலகத்தாய் காளி எனப் பட்டாள். கரியநஞ்சு கக்கும் பாம்பு காளிங்கன் எனப்பட்டது.வடமொழி இதனைப் பெரு வழக்காகக் கொண்டு தனதாக்கிக் கொள்ளினும் அதன் உடன்மொழிகளில் இச்சொல் பயிலாததனால், அது இந்தியர் முதல்- தாய்மொழியாம் பழந்தமிழ் அல்லது திராவிட மொழியேயாம் என்பது தெளிவாகும்.

படை படுத்தல்-கொல்லுதல் என்ற பொருள் தரும் தொழிற்பெயர். இது ஆகுபெயராய்ப் படுக்கும் கருவியையும், பொருளாகு பெயராய்ப் படுக்கும் மனிதத் தொகுதியையும் காட்டிற்று. படன் என்ற வடசொல் இதன் திரிபேயாகும் எனக் கொள்ளலாம்.

கரு என்பது உரி என்பது போன்ற உரிச்சொல்லடி, யற்கையில் பிறப்பிலிருந்தே வரும் இயல்பைக் கரு என்றும் பின்வரும் வளர்வை உரி என்றும் தமிழர் கூறிப் பொருள்களைக்