—
அப்பாத்துரையம் 1
136 ||- கருப்பொருள் என்றும் உரிப்பொருள் என்றும் வகுத்தனர். தனுடன் தொடர்புடைய பிற தனித் தமிழ்ச் சொற்கள் கருது, கருத்து என்பன. (கருமம் என்ற சொல்கூட வட மொழியினத்தில் இல்லாத வடசொல் ஆதலால் இவற்றுடனொத்த இயற்கைச் சொல் எனக் கொள்ளப் படலாம்). பிறப்பில் இயல்பாய் வரும் பண்புகள் ஏற்படுவது அன்னை வயிற்றில் ஆதலின், அது கரு என்றும். பிள்ளை வளரும் பை கருப்பை என்றும் கூறப்பட்டது. வடமொழி 'கர்ப்பம்' என்ற சொல் மூலமற்ற சொல்; அது தமிழ்ச் சொல்லின் திரிபேயாதல் வேண்டும்.
குவிதலின் இன்னொரு வடிவம் கவிதல். இத்துடன் தொடர்புடைய சொற்கள் கவிகை, கவிழ், கவர், கவடு முதலியவை ஆகும்; இவற்றினின்று தோன்றிய இரு சொற்கள் கவிஞன், கவிதை என்பன; கவர்ச்சியுடையன கவிதை ஆகும்.
கவடு என்பது இரு பிளவான கொம்பு. கவர் என்றும் உலக வழக்கு உண்டு. அதன் சொற்போலித் திரிபு கபடு. இரண்டக நெஞ்சத்தை, அதாவது வஞ்சத்தைக் காட்டும் வடமொழிச் சொல் கபடம் இதன் திரிபு.
ய
மேற்கூறிய வகையில் சொற்கள் பலவும் பெருக்கிக் கொண்டே போகலாம். சொல்லாராய்ச்சித் துறையில் முனைபவர்கள் இவற்றை ஒரு பொது எல்லைக் கோடாக மட்டும் கொண்டு ஆராய்ந்தால் வடமொழியினும் பல்லூழி தொன்மை யும்; இன்று காணப்பெறும் சிற்றிலக்கியம், சிற்றளவு கடந்து பேரளவும் உடைய தமிழ் மொழிப் பற்றிப் பலப்பல உண்மைகள் காண்டல் ஆகும்.
இன்றும் ஆழ்ந்து ஆராய்ந்தால் வடமொழியில் இடு குறியாகக் காணப்படும் சொற்கள் தமிழில் அழகிய திட்பமுடைய காரணச் சொற்களோ என்று ஐயுறுதற்கிடமிருப்பது காணலாம். தில்லையம்பலத்தின் பேர் சிதம்பரம் எனப்படு கிறது. சித் அம்பரம், என்று பிரிக்கப்பட்டு சித்-உயிர், அம்பரம்-வான்; உயிராகிய வானில் உலவுவது என்று கொள்ளப்படுகிறது. தமிழர் இதனைச் சிற்றம்பலம் என எழுதுதல் மரபு என்பது யாவரும் அறிந்த செய்தி.இது தமிழர் பண்டைய தவறுகளுள் ஒன்றோ என இந்நாளில் ஐயுறுவார் உண்டு. ஆனால், அது தவறன்று. ஏனெனில், சிற்றம்பலத்தின் எதிர்ச்சொல் பேரம்பலம். எனவே,