6
வளரும் தமிழ்
[137
எல்லா உயிர்க்கும் பொதுவான பொது வெளியைப் பேரம்பலம் என்றும், ஓர் உயிரின் உள்ள வெளியைச் சிற்றம்பலம் என்றும் தமிழர் கூறியிருத்தல் கண்கூடு. உயிரி லும் பொது உயிராகிய இறைவனைப் பேருயிர் என்றுந் தனி உயிர்களைச் சிற் றுயிர்கள் என்றும் அழைத்தனர். சிற்றுயிர் என்பதே வடவர் மொழியில் சித்' என வழங்கப்பட்டதோ என எண்ண இடமுண்டு. இவ்வுயிரின் நுண் உருவம் ‘வெள்ளி பொன் மேனிய தொக்கும்’ என்றார் யோகக் குறள் கண்ட ஔவையார். அதற் கேற்ப அடியார் தயத்திலிறைவன் நடமிடுவது பொன்னம்பல நடிப்பு என்னப்
படும்.
இன்னும் சித்திரம் என்பது ஓவியத்தின் மறுபெயர் என்றும், வடசொல் என்றும் கொள்ளப்படுகிறது. ஆனால் அவன் சித்திரமாகப் பேசுகிறான் என்ற உலக வழக்கில் அழகாகப் பேசுகிறான் என்ற பொதுப் பொருளைவிட, நுணுகி நுணுகிச் சின்னஞ் சிறு நயந் தோன்றப் பேசுகிறான் என்பதே தெள்ளத் தெளியக் காணப் பெறுகிறது. எனவே சித்திரம் என்பது “சிறு திறம்” “சிற்றுத்திரம்' என்பவற்றின் பண்டைய மரூஉவோ என்று எண்ணலாம். திறம் இங்ஙனம் திரம் ஆயிற்று எனக் கொள்வோமானால் 'சூஸ்திரம்' ‘சூத்திரம்' என்ற வடசொற்கள் ‘சூழ்ச்சித்திறம்’ 'சூள்திறம்' என்பவற்றின் மரூஉவோ என்றும், வேத்திரம் (பிரம்பு) என்பது வேய்த்திறமோ என்றும் ஐயுறலாகும்.
மேற்கூறிய இடங்களிலெல்லாம் தமிழர் இத்தமிழ்ச் சொல் மூலங்கள் வகுக்காமல் இருக்க வடமொழியாளர் மட்டும் வகுத்தது ஏன் என்று கேட்கலாம். இலக்கியத் தொடக்கக் காலம் தொட்டு ஒரு வகையில் தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் வடமொழியாளரின் நச்சுக்கொடி படர்ந்து அதன் முன்னைய செழுமையையும் தன்னாண்மையையும் படிப்படியாய் உறிஞ்சி வந்திருப்பது காணலாம். ஆனால், ஆராய்ச்சி நோக்குடன் நோக்குவார்க்கு அதனிடையேயும் தமிழின் தொல்நிலையை விளக்கும் தொலைவறிகுறிகள் தோற்றாமல் போகா. தமிழர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று
தொல்காப்பியர் காலத்திலேயே கொண்டிருந்தனர். ஆனால், புத்தர் சமணர் தோன்றியவிடத்தன்றி இந்தியாவில் எங்கும் தாய்மொழி வளம் பெற்றதில்லை. தமிழில் புத்தர் சமணர்