பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை





தோன்றுமுன் வளம் பெற்றிருந்த இலக்கிய இலக்கணம் புத்தர் சமண ஆரியர் கைப்பட்டு அவர்கள் வடமுறைகளுக்கிசைய வகுக்கப்பட்டது. அவ்வண்ணம் வகுக்கப்பட்ட நூல்களே போற்றப்பட்டு முன்னைத் தனித் தமிழ்ப் பெரு நூல்கள் அழிந்தன, அழிக்கப்பட்டன. அப்பெருந்தமிழ் நூல்களில் இலக்கணப் பெருமைக்கு ஒரு தொல்காப்பியமும் வாழ்க்கைப் பெருமைக்கு ஒரு திருக்குறளும் இலக்கியப் பெருமைக்கு ஒரு சிலப்பதிகாரமும் நமக்கு மீந்தன. அச்சிறு பல கணிகள் மூலம் முன்னைய பெருமையிற் பலவற்றை நாம் உய்த்தறியலாம். எனவே தொல்காப்பியம் மொழியாராய்ச்சிக்கு ஓரளவு பயன்படும். உலக வழக்குச் சொற்கள் இலக்கியத்தில் பிற்காலத்தார் ஒதுக்கிய பழஞ் சொற்களே யாதலால் அவையும், தமிழின் உடன் மொழியாகிய தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலியவையும், அவற்றிலும் சிலவகையில் தூயவையாயிருக்கக் கூடும். வடநாட்டு மலைவாழ் குடிகள், பலூச்சிகள் மொழிகளும் முன்னைய தமிழ்த் தொல்வடிவங்களை விளக்கவும் சொல் மூலங்களை முடிவு கட்டவும் உதவும் என்னலாம்.