பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. எழுத்துச் சீர்திருத்த முறைகள்

இந்திய மக்களிடையே மிகவும் பரந்து காணப்படும் அறியாமையைப் போக்குவதற்கான திட்டங்களுள் நாட்டின் பழைய எழுத்து முறைகளுக்குப் பதிலாக ரோமன் எழுத்து முறையைப் பரப்புவதும் ஒன்றாகும் என அரசாங்கத்தார் கருதி அதை நடைமுறைக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்வதாகக் கொஞ்ச நாள்களுக்கு முன்பு ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதன்படி "மதறாஸ் காலிங்” என்ற மாதமிரு முறைப் பத்திரிகை யுடன் ரோமன் எழுத்தில் அச்சிடப் பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றும் வெளியிடப்படுமென்று அறிவிக்கப் பட்டிருந்தது.

தற்கால நிலைமைக்குத் தக்கபடி தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் ஏற்படுத்துதல் வேண்டுமென்று பல முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், இவை தற்போது கருதப்படுவது போல் தமிழ் எழுத்து முறையை முற்றி லும் விலக்கிப் புதுமுறை வகுக்கும் முயற்சிகள் அல்ல. ஆகவே, இத்தகைய புது எழுத்து முறை அவசியமா என்பதையும், அதனால் ஏற்படும் ஆதாய இழப்புகள் எவை என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டியது இன்றியமையாதது ஆகும்.

திட்டம் தமிழ் மொழியை மட்டுமே யல்லாமல் இந்தியத் தாய் மொழிகள் எல்லாவற்றையுமே பாதிப்பதாயினும் தமிழ் மொழியைப் பற்றி மட்டிலுமே சிறப்பாக இங்கே அதனை ஆராய்வோம்.

ஆதாயங்கள்

மிக

இம்முறையை ஆதரிப்பவர்கள் கருத்தில் கொண்ட ஆதாயங்கள் மிகத் தெளிவானவை. அவற்றுள் முக்கியமானது அது அனுபவமாகக் கல்வி கற்பதை மிகவும் எளிதாக்கும் என்பதே.