பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அரிச்சுவடியின் மொத்த எழுத்துகள் நன்னூல் கணக்குப்படி 369 ஆகிறது. பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் அரிச்சுவடியிலுள்ளபடி இவ் வெண்ணிக்கை 247 ஆகும். ஆனால், ரோமன் முறையில் எழுத்துகளின் எண்ணிக்கை 26 தான்.

இன்னும் வேறு பல ஆதாயங்களும் இம்முறையில் இருப்பதாகக் கருதப்பட்டுவருகிறது. அச்சுக் கோப்பவர்களுக்கும் கையச்சு (டைப்) அடிப்பவர் களுக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை குறைவினால் எவ்வளவோ நன்மையும் வசதியும் உண்டு. கையச்சு அடிக்கும் இயந்திரமும் மிகச் சுருங்கிய அளவில் அமைக்கப்படு வதுடன் அச்சு நிலையங்களிலும் அச்சுகள் தொகை குறையும்.

மேலும் இந்தியாவிலுள்ள எண்ணற்ற மொழிப் பேதங்களை வரிவடிவிலேனும் இது மிகவும் குறைக்கும். ஒரு மொழியாளர் பேசுவதையோ கருது வதையோ மற்ற மொழி பேசுபவர் அறியமுடியாவிட்டாலும், ஊர்ப் பெயர்களும், ஆள்களின் பெயர்களும் எல்லா மொழிகளுக்கும் பொதுவாய் விட்ட சினிமா, மோட்டார், கவர்னர் முதலிய சொற்களும் பேச்சில் எப்படிப் பொதுவாய் இருக்கின் றனவோ, அப்படியே எழுத்திலும் எளிதில் எல்லா மொழியாராலும் பொதுவாக அறியப்படும் சொற்களாய்விடும்.

புதிதாக மொழி கற்பவர் ஒரு சில சொற்களை யறிந்தவுடன் பொதுவரிவடிவங்களை வாசித்து உணரக் கூடும்.

ரோமன் முறையில் அச்சுக்கொத்த அச்சு எழுத்து, எழுதுவதற்குரிய கையெழுத்து என்றும் இருவகை உண்டு. இன்னும் இத்தகைய பல ஆதாயங் களும் ரோமன் எழுத்து முறைக்கு ஆதாரமாகக் கூறப்படுகின்றன.

நடைமுறையிலேற்படும் சிக்கல்கள்

மேற்கூறியவற்றில்..............

பிந்திக் கூறப்பட்ட சில்லறை ஆதாயங்கள் உண்மையிலேயே ஆதாயங்கள்தாம் என்பதை மறுப்பதிற்கில்லை. அச்சுக்கும் கையச்சு அடிப்பதற்கும் இன்றைய நிலையில் தாய் மொழியின் எழுத்துகள் தொகையிலும் வடிவிலும் சிக்கலுடையவையே. தமிழைப் பற்றிய மட்டில் அது ரோமன் எழுத்தை விட மிகுதியாயினும் பிற இந்திய மொழிகளை நோக்கத் தொகை குறைந்ததே என்று கூறலாம். மேலும் தமிழ்