பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

[141

எழுத்துகளுக்குச் சிறிதளவு சீர்திருத்தம் செய்து இச்சில்லறைக் குறைகளைக் கூடப் போக்கவும் முடியும்.

இத்தகைய சீர்திருத்தங்களைவிட ரோமன் எழுத்து முறையை உயர்வாகக் கருதுவோர் அதில் அதிகப்படியாய் இருப்பதாக எண்ணும் ஆதாயங்கள் இரண்டு தாம்: அவை எழுத்து எண்ணிக்கைக் குறைவு. எல்லா மொழிகளின் வரிவடிவும் ஒன்றுபடுதல் ஆகியவையே யாகும்.

எழுத்துக் குறைவு

முதலாவதாக எழுத்துக் குறைவை எடுத்துக் கொள்வோம். ரோமன் எழுத்து முறையில் 26 எழுத்துகள் என்று கூறும்போது நாம் ஆங்கில மொழிக்குத் தேவையான ஆங்கில அரிச்சுவடியின் எழுத்துகளையே எண்ணுகிறோம். இவற்றுள் (x, f, z, b, g, d, q, w, ஆகிய) 8 எழுத்துகள் தமிழுக்குத் தேவை யில்லை. ஆனால் இதற்கு மாறாகத் தமிழ் அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளில் ரோமன் எழுத்து முறையில் இல்லாத எழுத்துகள் பல. உயிர்களின் நெடில்கள் 7-ம் வல்லினத்தில் ச, ட, ற என்ற 3-ம் மெல்லினத்தில் ங,ஞ, ண, ன ஆகிய 4-ம் இடை எழுத்தில் ழ, ள, ஆகிய 2-ம் ஆக 16 எழுத்துகள் ரோமன் முறையில் இல்லை.

மேற்கூறியபடி தமிழில் அதிகமாயுள்ள எழுத்துகளை ரோமன் முறையில் இரண்டு வகையாக எழுதலாம். ஒன்று அவற்றில் சில குறியீடுகளைச் சேர்த்துக் கொள்வது: உதாரணமாக (n) எழுத்தின் மேல் புள்ளியிட்டால் ‘ங்' என்றும் அதன்கீழ் புள்ளியிட்டால் 'ண்' என்றும் கொள்ளலாம். ஆனால், இம்முறை எழுத்து மயக்கத்தையும் எழுத்துப் பிழைகளையும் மலியச் செய்வதுடன், ஒலிகளையும் மயங்க வைக்கும்.

எழுதுவதிலும், வாசிப்பதிலும் இது மிகவும் சிரமத்தை உண்டு பண்ணுவதுடன் ரோமன் முறையின் ஆதாயங்களுள் ஒன்றாகக் கூறப்படும் எழுத்துச் சுருக்கத்தையும் இது அறவே ஒழித்துவிடும். ஏனெனில், அரிச்சுவடியில் வெளிப் பார்வைக்கு ()ே என்ற ஒரே எழுத்தேயிருந்தாலும், அச்சுக்கும், கையச்சுக்கும் குறியீடுகளுடன்கூடிய அத்தகைய பல எழுத்துகள் உண்மையிலே தேவைப்படும்.