பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(142) ||-

அப்பாத்துரையம் - 1

தமிழிலுள்ள அதிகப்படி எழுத்தைக் குறைக்க இன்னொரு முறை கையாளப்படலாம். தமிழில் தேவையற்ற எழுத்துகளை அதிகப்படி எழுத்துகளின் குறியீடுகளாக வழங்கலாம். இப்படி வழங்கினால் ரோமன் எழுத்தின் முக்கிய மான ஆதாயம் இரண்டாவது பொய்யாய்விடும். தமிழுக்கு வேண்டாத எழுத்துகள் மற்றத் தாய்மொழிகளுக்குத் தேவையானவையாகும். ஆகவே, ஒலி ஒற்றுமை கெட்டுப்போகும். மேலும் தேவையற்ற எழுத்துகள் 8 தாம்: அதிகப்படி எழுத்துகள் தமிழிலேயே 16. மற்றத் தாய்மொழிகளில் இன்னும் மிகுதி.

எழுத்துப் பெருக்கத்தால் ஏற்படும் அருவருப்புகள்

இது தவிர, ரோமன் எழுத்துகளில் அரிச்சுவடியில்தான் எழுத்துகளில் எண்ணிக்கை குறைவு. எழுதும்போது சொற்களை அமைப்பதற்கான எழுத்துகள் விரிவாகப் பக்கக் கணக்கில் நிறைத்து அருவருப்பையே உண்டாக்கும். இருக்கிறது என்ற சொல்லை எழுத Irukkiratu எனக் குறைந்தது 10 எழுத்துகள் தேவைப்படும். இது எழுதுவதற்கும் தொல்லை, படிப்பதற்கும் எளிதன்று. குறியீடுகளுடன் சேர்ந்து எழுதுவதானாலும் தொல்லை இன்னும் பன்மடங்காகும்.

மேலும், உயிரும் மெய்யும் சேர்ந்து தமிழில் ஒரே எழுத்தாக எழுதப் படுகிறது. ரோமன் முறையில் இவற்றைப் பிரித்தெழுதுதல் வேண்டும். தமிழரிடையேயும் பிற இந்தியத் தாய்மொழி யாளரிடையேயும், படித்தவர் களுக்குக்கூட உயிர் மெய் எழுத்தை உயிரும் மெய்யுமாகப் பிரித்துணர்வ தென்பது கல்லில் நாருரிப்பது போல் கடினமான காரியம். ஐரோப்பாவில் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே பெரிதும் உருவேற்றப்பட்டு விடும் இந்த முறையை இந்தியரனைவரும்-அதிலும் சிறப்பாகக் கிராமங்களில் வாழும் பாமர மக்கள் எளிதில் பின்பற்ற மாட்டார்கள் என்பதை அவர்களிடையே ஆசிரியர்களா யிருந்து போதனை நடத்தியவர்கள்தாம் எளிதில் அறிவார்கள்.

மேற்கூறிய செய்திகளால் ரோமன் முறையிலிருப்பதாகச் சொல்லப்படும் ஆதாயங்கள் ஆராய்ந்து பார்க்கப் போனால் ஆதாயங்களேயல்ல. அது மட்டு மன்று. அதில் இழப்புக்கள்கூட மிகுதியாயுள்ளன என்று காணலாம். சிறப்பாகக் கட்டாயக்