பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

[143

கல்விக்கு உதவியாக அது சற்றும் பயன்படாதென்றே தோற்றுகிறது. அவ்வகையில் ரோமன் முறையை விட நாம் மேலே குறிப்பிட்ட சில்லறைச் சீர்திருத்தங்கள் மிகுதியான பயன் தரும் என்றும் கூறலாம்.

சில்லறைச் சீர்திருத்தங்கள்

தமிழ் எழுத்துக்குப் புறம்பான ரோமன் முறை அல்லது நாகரிக முறை ஆகியவற்றின் உதவியில்லாமலே தமிழில் பல சீர்திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுள் சில எழுத்துகள் புதிதாய்ப் படிப்பவர்க்கு அதை எளிதாக்குவதுடன், அச்சுக்கும் வேண்டியபடி எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் தன்மையுடையவை. மலாய் நாட்டிலும் இந்தியாவிலும் வெளியிடப் படும் சில முற்போக்கான தமிழ்ப் பத்திரிகைகள் ஆகிய எழுத்துகளை லை, னை, ணை, ளை எழுதி வருகின்றன.இது புரட்சிகரமான மாறுதல் என்று சொல்வதற்கில்லை. புதிதாய்ப் படிப்பவர்கள் நிலையிலிருந்தும், வெளிநாட்டார் நிலையிலிருந்தும் பார்த்தால் இத்திருத்தம் இயல்பாகத் தோற்று கிறது வழக்கமான வடிவங்களே புதுமையாகவும் சிக்கல் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. இன்னும் ஆகிய எழுத்துகளும் இதே முறையில் அப் பத்திரிகைகளில் னா, றா, ணா என்று எழுதப் பெறுகின்றன. அச்சகத்துக்கும் கையச்சுக்கும் இதனால் ஏற்படும் ஆதாயம் கொஞ்சமன்று. ஏனெனில் இவற்றுக்கென அமைக்கப்பட்ட 8 அச்சுகள் மீந்துவிடுகின்றன. இதே சீர்திருத்தத்தை இன்னும் சற்று விரிவுபடுத்துவதானால், மெய்யுடன் உ, ஊ சேருமிடங்களில் வரும் குறியீட்டையும் ஒரே வழிப்படுத்தலாம். கூடுமானால் வடவெழுத்துகளான ஷு, ஹு என்பவற்றிலும் ஸூ, ஷூ, ஹூ என்பவற்றிலும் கையாளப்படும் வடிவத்தையே மேற்கொண்டு விட்டால் அச்சுகளில் இருபதுக் கதிகமாகக் குறைவு ஏற்படும். சுழியிடாத ‘உ’, சுழியிட்ட ‘உ' ஆகியவற்றைத் தலைகீழாக்கி ‘உ, ஊ' உயிர் மெய் குறியீடுகளாக்கிவிட்டால், ஆதாயம் இன்னும் மிகும். உருவமும் செயம் உடையதாகும். படிப்பவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் எகரத்திற்கான கொம்புக் குறியீட்டை எழுத்துகளுக்கு முன்னால் சேர்ப்பதற்குப் பதில் பின்னால் சேர்த்துக் கெ என்பதற்கும் பதில் க௦ என்றெழுதுவது கூட