பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

II.

அப்பாத்துரையம் - 1

இயற்கை நெறியை ஒட்டிய சீர்திருத்தமேயாகக் கூடும் என்று எண்ணு கிறோம்.

பிறமொழி ஒலிகள்

அதுபோக

இறுதியாக ரோமன் முறையில்லாத ஒலிகளுக்குக் குறியீடுகள் சேர்த்துப் புது ஒலிகளைக் குறிக்கக் கூடுமாயின், தமிழ் அரிச்சுவடியிலில்லாத புது ஒலிகளுக்கு அங்ஙனம் செய்யமுடியும் என்பது தெளிவே. பெரும்பாலும் தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றும் தமக்கெனத் தெளிவான ஒலி வேறுபாடுகளை உடைய வையாயிருக்கின்றன. இவ்வகையில் ரோமன் முறை தமிழ் எழுத்து முறையையும், பிற இந்தியத் தாய்மொழிகளின் எழுத்து முறைகளைவிட எவ்வளவோ பிற்பட்டதேயாகும். ஏனெனில், ஆங்கிலத்தைப் பற்றிய மட்டில் உயிர்களில் நெடில் குறில் வேற்றுமையில்லை. அது போக ஒவ்வோர் உயிரும் அவ்வப்போது ஒலியில்லாது வீணே வழங்கப்படுவதுடன், வெவ்வேறான 10 அல்லது 12 ஒலிகள் உடையவையாயிருக்கின்றன. இதுபோக மெய்களிலும் பல ‘ஒலிகள்' ஓர் எழுத்தாலும், பல எழுத்துகளால் ஓர் ஒலியும் குறிக்கப்பட்டு எல்லையற்ற குழப்பம் விளைகிறது. தமிழ் முதலிய நாட்டு எழுத்துகளைச் சீர்திருத்தி வழங்கினால் இத்தகைய குழப்பங்களுக்கு இடமில்லை. இம்முறையில் தமிழர் அறியும்படி தமிழில் இல்லாது, ஆங்கிலம் முதலிய மேல்நாட்டு மொழிகளிலும், வடமொழி இந்துஸ்தானி ஆகிய வடநாட்டு மொழிகளிலும் உள்ள ஒலிகளையும் தேவைப் பட்ட இடங்களில் குறித்துக்கொள்ளலாம்.