வளரும் தமிழ்
[147
தமிழிலக்கணம் தெரிந்தவர் எழுதும் தமிழை விட, தமிழன் பேசும் தமிழுக்கு இம் ம் மலையாளம் மிகவும் அடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.
தெலுங்கு மொழியிலும் வடமொழிச் சொற்கள் புகுத்தப்பட்ட வரலாறு; வடசொற்களைக் கலந்தபின் அச்சொற்கள் மட்டுமன்றித் தூய தெலுங்குச் சொற்களையும் வடசொல் எனச் சாதிக்கச் செய்யப்படும் முயற்சி ஆகியவற்றைப் பற்றி ஒரு தலைசிறந்த தெலுங்கு மொழியறிஞர் கூற்றுகளைக் கீழே தருகிறோம்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் தெலுங்கின் முதன்மை ஆய்வுரை யாளரான கொரடா ராமகிருஷ்ணய்யா எம். ஏ. அவர்கள் திராவிட மொழி நூலாராய்ச்சிகள் (1935) என்ற நூலிலும் திராவிட மொழிப் பொதுச் சொற்கள் (1944) என்ற நூலிலும், கீழ்வருமாறு ஆங்கிலத்தில் குறிப்பிடுவதைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருகிறோம்.
திராவிட மொழி நூலாராய்ச்சிகள் (பக்.42) தெலுங்கில் முதல் கவிஞன் நன்னயரே யாயினும் அவர் வடமொழிப் பற்றாளரானமையால் (வடமொழி கலந்த) கடுநடையில் 100-க்கு 75 வடசொற்களுடன் பாரதத்தை மொழி பெயர்த்தார். ஆயினும் அவர் பின் வந்த கவிஞர்கள் பலர், சிறப்பாகச் சைவப் புலவர்கள் இத்தகைய பெருவாரியான வடமொழி இறக்குமதியைக் கண்டித்து ‘ஜானு’ தெலுங்கு (தூய தெலுங்கு) நடையை ஆதரித்தனர். இத்தகைய தெலுங்கையே நாட்டுப் பொது மக்கள் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும் என்பது பல்குறிகி சோமநாதர் கோட்பாடு... மேலும் திக்கணர் 'வழங்காத புதுச்சொற்களை' வழங்குவது தவறு என்று கூறியவரே யாயினும், உள்ளார்ந்த தேசிய மனப் பான்மை உடையவரா யிருந்தமையால் நன்னயரைவிட மிகுதியான தூயதெலுங்கு அல்லது தேசிய மொழிச் சொற்களை வழங்கினார். ஆயினும், வட சொல் வழக்கு மிகுதி காரணமாக இத்தேசியச் சொற்கள் மேலும் வழங்காது போனதனால் இன்று திக்கணரின் தேசிய நடை கடுமையாகவும், நன்னயரின் கடு வடமொழி நடை எளிதாகவும் காணப்படுகிறது.