(148) ||
தமிழின மொழிப் பொதுச் சொற்கள்
அப்பாத்துரையம் - 1
இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளுமே வடமொழி அல்லது ஆரிய மூலங்களிலிருந்து தோன்றின என்ற நம்பிக்கை பொதுவாக இந்திய (ஆரிய) அறிஞரிடையேயும் இலக்கணப் புலவரிடையேயும் இருந்து வருகிறது. உண்மையில் தென்னிந்திய மொழிகளில் பெருவாரியாக வடமொழியிலிருந்து வந்த சொற்கள் உள்ளன என்பது உண்மையேயாயினும், தேசியப் பகுதி (தூய தாய்மொழிப் பகுதி)யே அதில் முனைந்த பகுதியாயுள்ளது; இதனை இலக்கண நூலாரும் ஒத்துக் கொள்கின்றனர். இந்நிலையிலும், தெலுங்கு மொழியிலும், பிற தென்இந்திய மொழிகளிலும் உள்ள சொற்களெல்லா வற்றையும் வடமொழி அல்லது பிராகிருதத்திலிருந்து வருவித்துக் காட்டவும், அதன் மூலம் வடமொழி, பிராகிருதம் ஆகியவற் றிலிருந்தே இம்மொழிகள் தோன்றியிருத்தல் வேண்டும் என்ற, தங்கள் மனத்திலூறிக்கிடக்கும் எண்ணத்தை வலுப்படுத்தவும் அவர்கள் முயல்கின்றனர். வடமொழியிலுள்ள சொல் மூலங்கள் (Roots) பல்வேறு முன் இடைச்சொற்களுடன் பல்வேறுபட்ட பொருள் கொள்ளத் தக்கவையாயிருப்பதால் எந்த மொழிச் சொல்லையும் அது எவ்வுருவமுடையதாயினும், பொருளுடைய தாயினும் வடமொழிக்கிணையத் திரித்துக் குழப்பமுடிகிறது. வடமொழியிலிருந்து பிறமொழிகளை வருவிக்க எடுத்துக் கொள்ளப்படும், இம்முயற்சியின் பிழை பாட்டை கி.பி.7ஆம் நூற்றாண்டிலிருந்த வடமொழி யறிஞரான குமாரிலபட்டர் கண்டித்து எச்சரித்துள்ளார்.
YT
குமாரிலபட்டர் கூறுவதாவது: தூய திராவிடச் சொற்களாகிய சோறு, பாம்பு, வயிறு, அதர் (பாதை) முதலியவற்றை வடமொழிப் பகுதிகளின் ஒலியுடனும் அவற்றின் பொருளுடனும் ஒட்டவைத்து வருவிக்க எண்ணுவது பொருத்த மற்றது. (அவர் வடமொழிக் கூற்றை அப்படியே தமிழில் தருகிறோம்).
தத்யதோ ஒதனம் சோறு இத்யுக்தே சோர பத்வாச்யம் கல்பயந்தி; பந்தாநம் அதர் இத்யுக்கே ‘அதர’ இதி கல்பயித்வா ஆஷூத் சத்யம் துஸ்த்ரவாத் அதர ஏவபந்தாஇதி. ததா பாம்பு சப்தம் பகாராந்தம் சர்ப, வசனம் அநாராந்தம் கல்பயித் வாசத்யம்