வளரும் தமிழ்
[149
பாப ஏவ அங்கள இதி வதந்தி; ஏவம் வயிறு சப்தம் ரேபாந்தம் உதரவசனம் வைரி சப்தே நப்ரத் யாம் நாயவதந்தி.
மேலும் தெலுங்கில் மோவி (-முன்வாய் அல்லது உதடு), மோகாலு (-முழங்கால் அல்லது முட்டு), பொக்கிலி (பொக்குள் அல்லது கொப்புள்-பொற் குழி), கோவலு (கோயில்-கோ-இல்; றைவன் வீடு), சிலுவா (சிலு-வாய்-வாயில் நஞ்சுடையது; பாம்பு), இனுமு (இரும்பு-பொன்-கரிய உலோகம்) என்ற சொற்கள் பிரிக்க முடியாது மாறிவிட்டபடியினால் பழந்தமிழ்ப் பொருளிழந்து விட்டன என்றும் அறிஞர் இராமகிருஷ்ணையா காட்டியுள்ளார்.
வடசொல்லை முதலில் புகுத்தி அதன்பின் எல்லாம் வடசொல் என்று கூற முனையும் வடஆரியர் சூழ்ச்சியை இத்தெலுங்கறிஞரும் வடமொழி யறிஞரும் கண்டிப்பது போலவே மலையாள மொழியை ஆராய்ந்த மேனாட்டு அறிஞர் டாக்டர் குண்டர்ட்டும் கண்டித்துள்ளார். அவர் கூறுவதாவது: "திராவிட மொழிச் சொற்கள் முழுவதையும்-ஏன் அதில் கலந்துள்ள அரபுமொழி, ஐரோப்பிய மொழிச் சொற்களையும் கூட-எல்லாம் வட மொழியிலிருந்து திரிந்து வந்தவையே என்று கூறும் இந்தியப் 'புலவர்கள்' எத்தனையோ பேரைக் காணலாம். ஆயினும் வடமொழியில் திராவிடச் சொற்கள் கலந்துள்ளன என்பதை ஒத்துக்கொள்ளும் இந்தியப் புலவர்களை எங்கும் காணமுடியவில்லை.”
குண்டர்ட் அந்நாள் இந்தியரிடம் கண்ட குறைகள் அறிஞரிடையே குறைந்து வருகிறது. ஆனால், பொது மக்களிடையே அறிஞர் அறிவு இன்னும் பரவ விடாது ஆரியப் பள்ளிகள், ஆரியப் பத்திரிகைகள், ஆரிய நிலையங்கள் தடுத்து வருகின்றன.