பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

155

ஆழ்வார்கள் சரிதைகளையும் சிவஞான போதத்தையும், தமிழ் முந்தியோ-வடமொழி முந்தியோ என்று மயங்கும்படி மொழிபெயர்த்த அவர்கள் திருக்குறளை மொழிபெயர்க்கா திருக்க மாட்டார்கள். வேதநெறியைத் தழுவிய தமிழர்களோ புத்தர், சமணர்களுக்குப் பின்னடையாமல் அதனை உச்சி மேற்கொண்டுவிட்டனர். இந்நிலையில் தமிழர் பலர் வேதநெறி, திருவள்ளுவர் நெறிக்கு மாறானதோ என்ற ஐயமும், வேதநெறி ‘வைதீகரிடையே' திருவள்ளுவர் நெறி வேத நெறிக்கு மாறாய் நின்று அதன் புகழைக் கெடுக்குமோ என்ற ஐயமும் நிலவின. தனால், இருசாராரிடையேயும் உட்பிணக்குத் தோன்றாமலும், திருவள்ளுவர் நெறிக்கு எதிர்ப்பு ஏற்படாமலும் காக்கவே பரிமேலழகர் அருமுயற்சி செய்து திருவள்ளுவர் நெறி வேதநெறியின் நற்சாறே என்று விளக்க முன் வந்தார் என்று தோற்றும்.

ஆயினும், திருக்குறள் வடமொழி நூல்களின் மேம்பட்ட நூல் என்பதை அவர் மறுக்கவில்லை. வாயார வற்புறுத்தாமலும் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. தெய்வமொழி என வேதநெறியாளர் கொண்ட வடமொழி நூல்கள், மக்களுக்கு மக்கள் எழுதிய அறிவு நூல்கள், மனித மொழியாகிய தமிழில் எழுதப் படினும், திருவள்ளுவர் நூல் தெய்வ நிலையில் நின்று எழுதப்பட்ட அருள் நூலே என்று அவர் கூறவந்த கருத்துக்கு அப்பாற்சென்று தாமே குறித்துள்ளார்.

பரிமேலழகர், வள்ளுவர் முதற் கருத்துக்கு மாறாக வலியுறுத்திப் பொருள் கொண்டதும் 'கால நிலை' யால் ஏற்பட்ட இன்றியமையா வேண்டுதல்களேயன்றி வேறன்று.

பரிமேலழகர் உரைபற்றிய செய்தியை இத்துடன் நிறுத்தி விட்டு அதனைத் 'தொக்காக'க் கொண்ட தற்கால வேதமொழிப் பற்றாளர் ஆராய்ச்சிகளை அடுத்துக் கவனிப்போம்.

வடமொழி தென்மொழிக் கால வரையறை தெரியாத காலத்தில் பரிமேலழகர் உரை எழுந்தது. தற்கால ஆராய்ச்சி யாளர் ஆராய்ச்சிகட்கு இத்தகைய தடங்கல் மிகுதியில்லை. இன்று வடமொழி என்று போற்றப்படுவது இலக்கியக் கால மொழியாகிய திருந்திய மொழியைத்தான். திருந்திய இலக்கியத் தமிழ் செந்தமிழ் எனப்படுவது போலத் திருந்திய வடமொழி