வளரும் தமிழ்
157
தேடிய எவரும் பர்த்ருஹரி என்பவர் எழுதிய முந்நூறு (த்ரிசதகம்) என்ற இந்த நூலை ஒப்புமைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு உண்மையான காரணம் வேறு எதுவுமில்லை. பர்த்ருஹரியின் காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பதை எவரும் அறிவர் என்பதே.
இறுதியாகத் திருவள்ளுவர் நூலுக்கு ஒப்புமையாக இன்று ஆராய்ச்சியாளர்க்குப் படும் நூல்கள் அன்று பரிமேலழகர் குறிப்பிட்ட நூல்களை யன்றி வேறில்லை என்ற முடிவுக்கு வருகிறோம். பரிமேலழகர் காட்டும் ஒப்புமைகளில் பெரும் பகுதி மனுநூல், காமாந்தக நீதிநூல், சாணக்கியர் பொருள்நூல் என்பவையே.ஒரு சிலர் பாரதத்தின் சில பகுதிகளையும் பகவத்கீதையையும் குறிப்பிடுகிறார்கள்.
பர்த்ருஹரியின் நூல்களைப்போல் தெளிவாய்ப் பிற்பட் நூலானால் ஆரியப் பற்றாளர் ஆராய்ச்சி எழுந்திருக்காது என்று கூறலாம். நேர்மாறாக அவை முற்பட்டவை என்று தெளிவுபடக் கூடுமானால் பரிமேலழகர் முடிபுடன் நின்றிருக்கலாம்.
மேற்கூறிய நூல்களில் பாரதம் பரதகண்டத்தின் மிகப் பழங்கதை. இக்கதை நிகழ்ந்தகாலம் கி.மு. 1000 ஆயிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆனால், இன்றைய வடமொழிப் பாரதம் கி.மு.1000-க்கும் கி.பி.500-க்கும் இடையே எழுதப்பட்டதென்பது தவிர அது யாரால், எப்பொழுது, எவ்வளவு எழுதப்பட்டது என்று யாரும் கூறுவதற்கில்லை. ன்னொரு வகையாகச் சொன்னால் இந்தியா வெங்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான எழுத்தாளர் கைச்சரக்குகளின் கோவை அது. காலம்பற்றிய ஆராய்ச்சியில் இத்தகைய கூட்டுச் சரக்குக்கு இடமில்லை என்று கூறவேண்டுவ தில்லை. பகவத்கீதையின் காலமும் இதுபோல் வரையறுக்கக் கூடாததே. கி.பி 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியார் இதற்கு உரை எழுதினார். அதற்குமுன் எப்போது அது எழுதப்பட்டது என்று கூறுவதற்கில்லை. கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்று சிலரும் கி.பி. 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு என்று சிலரும் கூறுவர். சங்கராச்சாரியருக்கு முன் வட மொழி இலக்கியத்தில் இதுபற்றிய குறிப்பு எதுவுமில்லை. அதன் கால வரையறை திட்டமாகுமுன் ஒப்புமை ஆராய்ச்சிக்கு