வளரும் தமிழ்
159
எழுதிய நூலையோ பின்பற்றி கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முன் யாரோ எழுதிய நூலாகவே இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார்கள். பொருள் நூலின் காலம் கி.மு. 4ஆம் கி.மு.4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதை அடிப்படையாய்க் கொண்டு பாணினியின் காலத்தை கி.மு. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத் துக்கு முன் என்று கொண்ட முடிபுகூட இப்போது இம்மறுப்பின் பின் பயனற்றுவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் சாணக்கியர், சந்திரகுப்தன் அமைச்சன் என்று குறிப்பிடும் மரபுரையே அவர் தென்னாட்டவர் என்றும் குறிப்பிடுகிறது. அவர் கூறும் அரசியல் முறைகள் சோழ பல்லவர் ஆட்சிமுறை பற்றிக் கல்வெட்டுகளால் தெரிபவற்றுடன் மிகவும் ஒத்தே காணப்படுகிறது.
மேற்கூறியவற்றால் சாணக்கியர் நூலின் ஒப்புமையும் கால வரையறைப் படாத ஒற்றுமை என்றாகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக வடமொழி நூல்கள் அக்கால அறிஞர்களின் கூட்டுச் சரக்கு என்பதையும், தமிழிலக்கியத்தினும் வட மொழியின் திருந்திய இலக்கியம் பிற்பட்டது என்பதையும், சமயம், கலை, அறிவியல் ஆகியவற்றில் அது தமிழுலகுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது என்பதையும், தமிழ் நூல்கள்போல் காலம், இடம், ஆசிரியர் குறிப்பற்றது என்பதையும் ஆராய்ச்சியாளர் நினைவில் வைத்தல் வேண்டும்.
நாம் மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சிப் பெரியார் இவ்வொப்புமை ஆராய்ச்சியில் முனைந்ததுடன் திருவள்ளுவர், இளங்கோ காலங்களையும் ஐயுற முற்படுகிறார். தமிழ்ப் புலவர்கள் அவருக்கு விடையிறுக்கக் கூடுமாயினும் அவரை ஓர் ஆராய்ச்சியாளர் என்று கருதாததால் விடையிறுத்திலர். அவர் கொள்கை வரலாற்றுக் கண்ணை மூடிக்கொண்டு தடவும் முயற்சி என்பதைக் காட்ட இரண்டு செய்திகள் மட்டும் கூறுவோம்.
‘சிலப்பதிகாரம்’ கயவாகு என்ற இலங்கையரசன் காலம். இலங்கையில் இரண்டு கயவாகுகள் ஆண்டனர். முதலாமவன் கி.பி. 2ஆம் நுாற்றாண்டினன். இரண்டாமவன் கி.பி. 6ஆம் நுற்றாண்டுக்குப் பிந்தியவன். சிலப்பதிகாரமும் சங்க நூல்களும்