இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(160) ||-
அப்பாத்துரையம் 1
—
முதல் கயவாகு காலத்தவையல்ல, இரண்டாமவன் காலத்தது என்பது அப்பெரியார் கூற்று.
அப்பர் சம்பந்தர் 7ஆம் நூற்றாண்டவர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்கள் தேவாரங்கள் சங்க காலத்தைப் பழங்காலமாகக் குறிப்பது பெரியார் கூற்றுக்கு முரண்படும்.
சிங்கள மொழியில் சிலப்பதிகாரம் கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பெரியார் கூற்று இதனால் முற்றிலும் அடிபடுகிறது.
ஆரிய மொழிச் செருக்கு புதுவெள்ளமாய் ஓடிய பரிமேலழகர் காலத்தில் மங்காத வள்ளுவர் பெருமை, எப்பெரியார் காலத்தும் மங்காதெனவும், எவ் ஒப்புமைக்கும் ஈடு செலுத்தும் எனவும், காலப்பழைமை இல்லாதவிடத்தும் அதன் முதன்மை மாறாதெனவும் தமிழுலகம் உறுதியாக நம்பலாம்.