அப்பாத்துரையம் - 1
162 || சிலப்பதிகாரமும் தமிழர் பண்டைய முத்தமிழ் வளத்துக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. ஆயினும் கொற்கையிற் கண்ட வடக்கு நோக்கியின் தன்மையைப் படைவீர நண்பன் விளக்கும்வரை நாம் அதன் உயர்வை அறிய முடியாதிருந்தது போலவே, இச்சிலம்புச் செல்வத்தின் தன்மையும் நமக்கு முற்றிலும் விளங்கா திருக்கின்றது. படைவீர நண்பன் அனுபவ அறிவு நமக்குத் துணை
செய்வது போல், இங்கு, பழந்தமிழர் மரபுகளை
அறிந்தவர்களிடமிருந்து நாம் துணை பெறுதல் அவசியம்.
தமிழுரையாசிரியர்கள் ஓரளவு சிலப்பதிகாரத்தை உணர நமக்குப் பேருதவி செய்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் காலத்திலிருந்த தமிழ்ப் பண்பும் தமிழ் மரபும் கூட இன்று சிதைந்துவிட்டது. அவர்கள் துணையும் அவ்வளவுக்கு நமக்கு மலைப்பையே உண்டுபண்ணுகின்றது. அவர்கள் இதனை முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம் என்று அழைத்துப் போயினர். நாமும் அதனைப் பின்பற்றி அதனை அவ்வாறே அழைக்கின்றோம். ஆனால், எங்கே முத்தமிழ், எங்கே நாடகம் என்று தேடாதிருக்க முடியவில்லை. வரிப்பாட்டுகள் அங்கங்கே பாடப்படுவதனால் இசைத்தமிழ் ஓரளவு உண்டு என்னலாம்.
கூத்துப்பற்றி ஒன்றிரண்டு இடங்களில் குறிப்பு வருகிறது. அதனால் அது நாடகக்காப்பியம் ஆகும் என்று கூறி அமைதி பெறவேண்டுமா! இவற்றின் விரிவுகூட உரையாசிரியர்கள் தருவதன்றி வேறன்று. ஆகவே, அது நாடகக் காப்பியம் என்று கூறுவது வெறும் உபசார வழக்கு மட்டும்தானா?
ன்று சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம் என்று கூறுவது ஒருவகையில் உபசார வழக்கேயாகும். நாடகம் என்றால் கூத்து அல்லது நடனம் என்று கொண்டால்கூட, நாடகக் காப்பியம் என்று வழங்கப்படும் அளவுக்கு அது அவ் வகைகளில் நிறைவுடையதாயில்லை. ஆயினும், அது பழங்கால நாடக இயல்பை அறிய உதவுவது; அதன் சின்னங்களை உடையது என்பதில் ஐயமில்லை. அச்சின்னங்களின் மூலம் அதன் பழைய நிலையை ஆராய்ந்து பின் நாடகக் காப்பியம் என்ற பெயருக்கு அது எவ்வளவு தூரம் தகுதியுடையது என்று காண்போம்.
நாடகம் என்பது உரையும் பாட்டும் கூத்தும் கதையும் விரவிவருவது. கேள்விக்கும் காட்சிக்கும் விருந்தளிப்பது.இன்று