வளரும் தமிழ்
[163
தமிழ் நாட்டில் நாடகங்கள் நடிக்கப்படுகின்றனவாயினும், அவை பழந்தமிழ் மரபுடன் தொடர்பு அற்றுப் போயிருக்கின்றன. ஆகவே, மிகப் பழையகால நாடக நிலையை அறிய அவை உதவ வில்லை. சிலப்பதிகார உரைக் குறிப்புகளும் மேற்கோள்களும் அந்நாளைய இசை, கூத்து ஆகியவற்றின் உயர் நிலையையும் விரிவையும் பெருக்கத்தையும் குறிக்கின்றன. ஆயின், இவ்வகல் விரிவுடைய கலைப்பண்பு எங்கே போயிற்று? முற்றிலும் அழிந்துவிட்டதா? சிலப்பதிகாரத்தை அறியும் அளவுக்கேனும் அவற்றை உய்த்தறிய முடியாதா என்று ஆராய்வோம்.
சிலப்பதிகாரத்தில் காணப்பட்ட இசைப்பண்பு அழியாது பல நூற்றாண்டுகள் நிலவியது என்பதற்குத் தேவாரம் சான்றுதரும். தேவாரத்தில் சிதைந்த பதிகங்கள் போக, மீந்தவற்றுள் பழைய பண்கள் பல இடம் பெறு கின்றன. இப்பண்களைப் பழங்காலத்தில் பயிலப் பாணர் என்ற தனி மரபினர் இருந்ததாக அறிகிறோம். சம்பந்தர் காலத்தில் பதிகங்களை யாழிற் பாடிய திருநீல கண்டயாழ்ப்பாணரும், தேவாரத்துக்குப் பண் வகுத்த நங்கையும் இம்மரபின ராவர். இம்மரபினர் பெயரை இலங்கை நாட்டு யாழ்ப்பாணம் இன்னும் நினை வூட்டுகிறது. சோழப் பேரரசர் தேவாரம் பாட அமர்த்திய ஓதுவார் மரபினர், பெரிதும் இம்மரபினர் தோன்றல்களாகவே இருந்திருக்கக்கூடும்.
பாட்டுப் பாடும் பாணமரபினர் சங்ககால முதல் சோழர் காலம்வரை காலத்துக்கேற்ப மாறிப் பின் அழிந்துபட்டனர்.சங்க நாள்களில் பாணருடன் கூத்துப் பயின்ற மக்கள் விறலியர் எனப்பட்டனர். சிலப்பதிகாரத்தில் கூத்தின் ஒருவகை சாக்கையர் கூத்து என்று கூறப்படுகிறது. சாக்கையர் என்பவர் கூத்து வல்லுநர் என்று அறிகிறோம். பிற்காலத் தமிழகத்தில் இம்மரபும் பாணர் மரபைப் போலவே அற்றுப் போயிற்று. இவ்விருமர பினருமே பழங்காலத் தமிழ் அந்தணர் மரபுபோலும்! தமிழ் நாட்டில் இம்மரபு இன்று காணப்படவில்லையாயினும் மலையாள நாட்டில் அவர்கள் இன்றும் உள்ளனர். இன்றும் அவர்கள் பழந்தமிழ்ப் பெயரால் ‘சாக்கியர்’ என்றும் ‘சாக்கர்’ என்றும் வழங்கப்படுகின்றனர். அவர்கள் இன்றும் அந்தணராகவே கணிக்கப்படுகின்றனர். அவர்கள் தொன்றுதொட்டு சேர அரசர்களாலும் அவர்களது பிற்காலத் தோன்றல்களாலும்