13. தமிழக அறிவியல் வளர்ச்சி
தமிழக அறிவியல் வளர்ச்சி என்றதுமே எவரும் தமிழகத்துக்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றுதான் கேட்கக்கூடும்! ஆம், இன்றைய தமிழக நிலை அதுதான்! ஆனால், இதே நிலைமை என்றும் இருக்க முடியுமா? இந்நிலை மாற வேண்டாவா? அதற்கான கனவுகளாவது காண வேண்டாவா? திட்டம் தீட்ட வேண்டாவா? இவை பற்றித் தமிழகத்தில் கருத்துள்ள தமிழர் சிந்திக்காமலிருக்க முடியாது. சிறப்பாகத் தமிழகப் பணியில் முனையும் இளைஞர்கள் இத்துறையில் இன்னும் நெடுநாள் அசட்டையாய் இருக்க முடியாது.
இன்று தமிழ் மாணவர்களிடையே தமிழார்வத்தை ஊட்டிவிட்டோம். அத் தமிழார்வம் தமிழறிவை ஊட்டிவிட்டது. அத்துடன் நிற்கவில்லை. அவர்கள் தமிழ்ப் பணியை விரிவுபடுத்தித் தமிழிலக்கியப் பணியுடன் நிறுத்தாமல், தமிழர் பணியில் இறங்கிவிட்டனர். தமிழரைப் பண்டைத் தமிழர், முழுத் தமிழ்ப் பண்பாடுடைய திராவிடர்களாக்க முனைந்த திராவிட இயக்கத்தையும், தன்மான இயக்கத்தையும் பகுத்தறிவியக்கத்தையும், சீர்திருத்த இயக்கத்தையும், தன்மான திராவிட நாடு காணும் ஆர்வத்தையும் இத் தமிழார்வம் தலை நின்று பரப்பிவிட்டது. இவற்றை முழு அளவில் பயன்படுத்தி நாட்டு வாழ்வை உயர்த்த வேண்டுமானால், இளைஞர் ஆக்கப் பணியில் இறங்குதல் ர் வேண்டும். தமிழர்க்கு, திராவிட இயக்கத்தவர்க்கு ஆக்கத் துறையில் முதல் முன்னணியாயிருக்க வேண்டிய துறை அறிவியல் வளர்ச்சி பற்றிய திட்டங்கள் தீட்டுவதே.
ெ தன்னாட்டில் இதுவரையில் ஏற்பட்டுள்ள சீரிய முயற்சிகள் இரண்டே இரண்டுதான். திட்டம் தீட்டுமுன் அவற்றில் கருத்துச் செலுத்துதல் வேண்டும். அவற்றைப்