(168) ||-
அப்பாத்துரையம் - 1
பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று அறிவியல் வளர்ச்சிக் கான ஆக்கக் கருவிகள் செய்யும் தொழில். ஆந்திர நாட்டில் இதற்காக ஆந்திர அறிவியல் கழகம் நிறுவப்பட்டு நடைபெறுகிறது. திராவிடப் பண்பாட்டடிப் படையுடன், திராவிட நாட்டு நோக்குடன் இது அமையப் பெறவில்லை யானாலும், இது திராவிட நாட்டில் இருப்பதே. இது போன்ற கழகங்கள் தமிழகத்திலும், பிற தென்னாட்டுப் பகுதிகளிலும் அமைதல் வேண்டும்.
ரண்டாவது அறிவியலுக்கு உதவும் உதவும்
தொழில்
துறைகளான ஆலைகள், பொறியூர்திகள் செய்யும் தொழில் முதலியவையே, இத் துறையில் முதலாளியாக மட்டுமன்றிப் புத்தாராய்ச்சியாளராகவும், புது ஆக்க முயற்சியாளராகவும் அறிஞர் ஜி.டி. நாயுடு அவர்கள் விளங்குகிறார்கள். பகுத்தறிவியக்கம் அறிவியலியக்கமாக வளருமானால், அத்தகையோர் இன்று இத்துணை அல்லற்படத் தேவையிராது, திராவிடநாடு பெறும் வரை அவர்கள் வாளா இருத்தல் வேண்டும் என்பதில்லை, சிறு அளவிலாவது அவர்கள் உழைப்பை பயன்படுத்தலாம்.
திட்டந் தீட்டுவதன் அவசியம் இது. திட்டத்துக்கான கூறுகள் என நாம் நினைப்பவற்றைத் தற்காலிகமாக ஐந்து கூறுகளாக வகுக்கலாம்.
1.
2.
3.
4.
மொழித்துறையில் அதற்கான பழஞ்சொற்களைப் புகுத்துதல்,புதுச் சொற்களை ஆக்குதல்.
மேடைப் பேச்சுகளிலும், பத்திரிகைக் கட்டுரைகளிலும், இயக்க நடைமுறைகளிலும் அமைப்புகளிலும், அறிவியல் தலைப்புகளுக்கும், பிரசாரங்களுக்கும் வழிவகுத்தல்.
அறிவியல் கருத்துகளை மக்களிடம் பரப்பும், சிறு வெளியீடுகளைப் பெருக்குதல், அறிவியல் வளர்ச்சிக்குக் குந்தகமாக இருக்கும் பழைய மூட நம்பிக்கை மனப்பான்மையை ஈவிரக்கமின்றிச் சாட இளை ஞர்கள் பலரை ஊக்கி, நூல்கள் எழுதுவித்தல்.
தொழிலாளர்களுக்குச் சிறப்பாகவும் பொதுமக்களுக்குப் பொது வாகவும் அறிவியல் வளர்ச்சியாலும் தொழில்துறை