பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(170) ||

அப்பாத்துரையம் - 1

எல்லாக் கருத்துகளும் தமிழில் அமைந்துவிடுவது உறுதி. அக்காலத் தில், தமிழ் பிற இந்திய மொழிகளுடனும் வட மொழியுடனும் மட்டுமன்றி, மேனாட்டு மொழிகளுடனும்கூடப் போட்டியிடும் தன்மையுடையது என்பது மொழியாராய்ச்சி யாளர் கண்டுவரும் முடிவு. அன்றியும் தமிழைவிட வளம் குறைந்த பிறமொழிகளில்கூட வடமொழிச் சொற்கள் புகுத்தி இத்தாய் மொழிச் சொற்கள் ஒழிக்கப்படாமலிருக்குமானால், அவற்றிலும் போதிய சொற்கள் வளர்ச்சியடையும் என்பதை மலையாள மொழியும், கன்னடமொழியும், இராயல சீமாத் தெலுங்கு மொழியும் பயில்பவர் அறிவர். வடமொழியை இன்று புகுத்த முனைபவர் பிறமொழிக் கலப்பு வேண்டுமென்று பொதுவாகக் கூறுபவர்போல் பிரச்சாரம் செய்வது உண்மையில் வடமொழிக் கலப்புக்கு மட்டுமேயாகும். இத்தகையோர் பிறமொழிப் பசப்புப் பசப்புவதை விட்டுத் தாய்மொழிப் பற்றுடையவராய்த் தங்கள் வடமொழியிலேயே அறிவியல் நூல்கள் எழுதி மேனாட்டவர்க்கு வழி காட்டட்டுமே என்று நேரிடையாக அறைகூவல் விடுக் கிறோம்! வடமொழியில் முடியாத ஒன்றைத் தாய்மொழியில் புகுத்து வானேன்? தங்கள் தாய்மொழியாய் இயங்கும் தன்மை கூட அற்ற ஒருமொழியின் சாக்காட்டுநோயை உயிருள்ள தாய்மொழிகளிலும் குத்திச் செலுத்தி அவற்றைச் சாகடிக்க முயல்வானேன்? பிற மொழிச்சொல் இன்றியமையாது தேவைப்பட்டால் அறிவியல் வளமும் உலக வழக்கும் உடைய ஆங்கிலம் முதலிய மேனாட்டு மொழிச் சொற்களை எடுக்கலாமே? இந்தியாவில் ஒற்றுமை வேண்டுமானால் எல்லாத் தாய்மொழிச் சொற்களையுமே பயன்படுத்தலாமே! தாழ்த்தப் பட்டநாட்டு மக்களுக்குப் புரியாமல் தமக்கு மட்டுமே புரிந்ததாகக் காட்டிக்கொள்ளும் அறிவு வரம்பற்ற மொழியின் புரியாச் சொற்களைப் புகுத்திக் குழப்புவானேன்!

தொழிலாளர்களைப் பற்றியவரை அவர்கள் இன்று முடிந்தமட்டும் தங்கள் வழக்காற்றிலுள்ள தனித்தமிழ்ச் சொற்களுடன் தற்காலிகமாகவேனும் ஆங்கிலச் சொற்களை வழங்குவதே அவர்கள் விரைந்த அறிவியல், தொழில்கல்வி வளர்ச்சிக்கேற்றது ஆகும்.

மொழித் துறைக்கு அடுத்தது பிரசாரத்துறை. இதில் ஆக்கவேலைக்கு முன்னீடான சூழ்நிலை மக்களிடையே