இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(172) ||-
அப்பாத்துரையம் - 1
ஆகியவர்கள் புத்தாராய்ச்சிகள் யாவும் பாலைவன மலர்களே, நாட்டு மக்கள் வாழ்வுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் உதவ முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆங்கிலநாட்டுப் பற்றும் கல்விகற்ற வகுப்பினர் அடிமை மனப்பான்மையுமே அவர்களிடம் அறிவு வளர்ச்சியுடன் தாய்மொழி வளர்ச்சியும் நாட்டுப் பற்றும் ஒன்றுபடாமல் செய்துள்ளது. அதுவே அறிவியற் படைப்பாற்றலையும் தடுக்கிறது.
தாய்மொழி, அறிவியல், தொழிலுலகு மூன்றும் சேர்ந்த அறிவியலே நாட்டு அறிவியல் ஆகும். வளர்க நாட்டறிவியல். வாழ்க தமிழ்.