(174) ||
அப்பாத்துரையம் - 1
பெரும்பாலாகப் பேசப்படும் மொழிகள் ஆங்கிலம். சீனம், இந்தி, வங்கம் முதலியவை. தமிழ் பேசுவோர் தொகை இவற்றினும் மிகக் குறைவு. பேசப்படும் இடமும் மிகக் குறுகிய டமும் மிகக் குறுகிய இடம். எனவே, ந்நிலையிலுள்ள பல மொழிகளுடன் வைத்தே தமிழ் எண்ணப்படுகிது.வழங்கா மொழியாகிய வடமொழி இம்முறையில் எண்ணப்படுவதில்லை! வரலாற்று முறையிலும் இலக்கியப் பண்பாட்டு முறையிலும் அதன் உயர்வு உணரப்படுவது இதற்குரிய காரணம் ஆகும். தமிழ்க்கும் இத்தகைய உயர்பண்பாடு உண்டென்பதை இன்றைய தமிழர் நிலையும்-தமிழ் நிலையும்- தமிழர் புறக்கணிப்பும்-திரையிட்டு மறைக்கின்றது. ஒரு வேளை தமிழும் வடமொழிபோல் வழங்காதிருப்பின் இவ்வுள்ளார்ந்த பண்புகள் மதிப்புப் பெறக்கூடும் என்றுகூடக் கூறலாம். ஆகவே, காய்தலுவத்த லின்றித் தம்மொழியில் கருத்தூன்றும் தமிழ் இளைஞர்க்கும் பிறநாட்டு நல்லார்க்கும் தமிழின் வளம், தனிச் சிறப்புகள் ஆகியவற்றை அறிவியல் வரலாற்று முறைகளில் பிறழாது எடுத்துக் கூறுவது பயனுடைய தாகும்.
தற்கால மொழி என்ற முறையில் பெறப்படாத உயர்வு தமிழ்க்குத் தொன்மொழி-என்ற நிலையில் பெறப்படலாம் என்று நாம் கருதக்கூடும். தொன் மொழிகளில் மக்கள் வாழ்க்கைக்கு நிலையான பயனுடையவையாய், முக்காலத் தும் அதன் வழிகாட்டிகளாய் இயங்கும் மொழிகள் உயர் தனிச் செம்மொழிகள் (ஊடயளளஉையட்டயபோயபநள) எனப்படும். கிரேக்க மொழியும் இலத்தின் மொழியும் ஐரோப்பியரால் உயர்தனிச் செம்மொழிகள் எனப் போற்றப்படுகின்றன. இன்று வடமொழியும் அவற்றுடன் ஒப்ப உயர்தனித் செம்மொழி என்று ஏற்கப்பட்டிருக் கிறது. உலகின் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் கிரேக்க இலத்தின் துறைகளுடனொப்ப வடமொழிக்கும் தனித்துறை வகுக்கப்பட்டுள்ளது. இம் முதன் மொழிகளுக்கும் அடுத்தபடியாக உலகப் பெருஞ் சமயங்களின்
தாயக
மொழிகளாகிய ஏபிரேயம், அரபு முதலியவையும் பாரசிகமும் இடம்பெறுகின்றன. உயர்தனிச் செம்மொழிகள் நிலையிலன்றா யினும் வரலாற்றுச் சிறப்பும், இடச் சிறப்பும் உடையவையாக ஐஸ்லாண்டிக், காதிக், பழம்பாரசிகம் முதலிய சில்லறைத் தொன் மொழிகள் இயங்குகின்றன.