வளரும் தமிழ்
175
நாட்டு வரலாற்றாராய்ச்சியும் இலக்கிய வரலாற்றா ராய்ச்சியும் தொடக்க நிலையிலிருந்த காலத்தில் தமிழ் இலக்கியம் மற்ற வட இந்திய, தென் இந்திய மொழிகளிலும் பழைமையுடையது என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ஆனால், அது எவ்வளவு தொலைவு பழைமையுடையது என்பது உணரப்படாமலே இருந்தது. தமிழில் பெரும்பற்றுடைய கால்டுவெல், போப் ஆகியவர்கள்கூட இன் றிருக்கும் தமிழிலக்கியத்தின் மிகப் பழைமை வாய்ந்த திருக்குறள், சங்க இலக்கியம் ஆகியவற்றின் காலம் எட்டாம் நூற்றாண்டு என்றே கருதியிருந்தனர். அவை கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவையென்பதும், தொல்காப்பியம் அவற்றினும் மிகத்தொன்மை வாய்ந்ததென்பதும் இப்போது தெளிவு பட்டுள்ளது. தமிழில் இக்காலத்துக்கு முன் இலக்கியமே இல்லை என்று கொண்டால்கூட இந்தியாவில் வடமொழி உட்பட எல்லா மொழி இலக்கியங்களுக் கும் தமிழ் ஆயிர ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் முற்பட்டதாகும். இக்காலத் திலும் பழைமை யுடைய உலக இலக்கிய மொழிகள் உயர்தனிச் செம்மொழிகளுள் முதல் இரண்டு மொழிகளும் எபிரேயமும் மட்டுமேயாகும்.
ஆனால், தமிழில் தொன்மை மிக்கவை என்று நாம் கொள்ளும் நூல்களுள் எதுவும் கலைப் பண்பாட்டு வகையில் தொடக்கப்படி இலக்கியத்தைச் சார்ந்த நூலாகக் காணவில்லை. தொடக்கப்படி நாகரிகத்தைக் குறிப்பதாகவும் இல்லை. முதல் இலக்கிய நூலான திருக்குறள், அன்றும் இன்றும் தமிழகத்தில் மட்டுமன்றி உலகிலேயே ஒப்பும் உயர்வுமற்ற தனிப்பெருநூல். தொல்காப்பியமும் இன்றிருக்கும் இலக்கணங்களுள் பழைமை யுடையதாயினும் பிற்கால இலக்கண நூல்கள் அனைத்தையும் விட விரிவானது. சங்க இலக்கிய நூல்களும் முற்ற வளர்ந்த ஓர் இலக்கியத்தின் சிதறிய துணுக்குகளின் தொகைக ககளேயாம். மேலும் தொல்காப்பியத்துக்கு முன்னும் விரிந்த இலக்கண இலக்கியங்கள் இருந்தன என்பதை அதில் காணப்படும் அகச் சான்றுகளாலேயே உய்த்தறியலாம். மரபுரையோ இதற்கு நெடுங்கால முன்னதாகவே இருபெருஞ் சங்கங்கள் இருந்ததாகவும், ன்றிருக்கும் இயல்பகுதி மட்டுமன்றி அக்காலத்தில் இசை, நாடகம் என்ற இருவேறு பெரும் பிரிவுகளிருந்ததாகவும் குறிப்பதுடன், அத்தகைய நூல்கள் பலவற்றின் பெயர்களும்