பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

177

ஆகவே, பண்டை இலக்கிய மொழி அல்லது உயர் தனிச் செம்மொழி (Classical Langauge) என்றால் இறந்துபட்டமொழி யாகவே இருக்கும் என்ற தப்பு எண்ணம் ஏற்பட்டுள்ளது. தப்பெண்ணத்துக்கு ஆளான மொழி தமிழ் ஒன்றே!

இரண்டு உலகுகளை இணைக்கும் பாலம்

உலக மொழிகளிடையேயும் சரி, இந்திய மாநில மொழிகளிடையேயும் சரி, தமிழ் பல வகைகளிலும் தனித் தன்மையுடையது. பண்டைய வேத மொழிக்கும் கிரேக்க உரோம நாகரிகங்களுக்கும் முற்பட்ட எகிப்திய பாபிலோனிய நாகரிகங்க ளுடன் தோழமைபூண்டு, அவற்றினும் முற்பட்டதும் மேம்பட்டதும் ஆனதென்று அறிஞரால் கொள்ளப்படும் மொகெஞ்சதாரோ நாகரிகத்துடன் இணைந்த நாகரிகப் பழைமையுடைய மொழி தமிழ். ஆகவே, இம்மொழி உண்மையில் இறந்துபட்ட ஒரு பேருலக நாகரிகத்துக்கும் சென்ற 2000 ஆண்டுக்குள் அதன் அழிபாட்டின் மீது புதுவதாக வளர்ந்த

ன்றைய உலக நாகரிகத்துக்கும் இடையே அமைந்த ஒரு பாலமாகும். மனித நாகரிகத் தோற்ற வளர்ச்சிகளை ஆராய விரும்பும் உலகப் பற்றாளர்களுக்குத் தமிழகம் ஒரு வற்றா உயிர் ஒழுக்குடைய கருவூலமே என்னலாம்.

வரலாற்றுக்கு முற்பட்ட உலக மொழிகளான ஈபுரு, அரபு முதலிய செமித்திய இனமொழிகளுடன் திராவிடமொழி யினத்துக்கு உறவு உண்டு. அவ்விரு சார்பு மொழிகளையும் ஒருங்கே ஆராயும் ஆராய்ச்சி இன்னும் ஏற்படவில்லை. ஆனால், பண்டிருந்தே அந்நாடுகளுடனும் கிழக்காசிய நாடு களுடனும் தமிழகம் வாணிக, அரசியல், ஆட்சித் தொடர்புகள் கொண் டிருந்தது. இன்றும் 'ஏழு கடல்களிலும் கடல்கடந்த நாடுகளிலும் தமிழர் மட்டுமே பரவி யுள்ளதும் இவ் வுள்ளார்ந்த தொடர்பின் பயனே என்று காணலாம். கடல் கடந்த இந்தியர் மிகப் பெரும்பாலோர் தமிழரே என்பதும், கடல் கடந்து பேசப்படும் இந்திய மொழி தமிழ் ஒன்றே என்பதும் ஆராய்ச்சியாலறியப்பட வேண்டாத பொது அறிவுச் செய்திகளாயினும், பொது மக்களிடையே எக்காரணத்தாலோ அறிவிக்கப்படாத செய்திகளாகவே உள்ளன.