(178) ||- தமிழிலக்கிய வாழ்வின் தனிச் சிறப்புகளைக் கழக வாழ்வு, முத்தமிழ்ப் பாகுபாடு, பொருள் முதன்மை (டீசபைேையடவைல), நாட்டு வாழ்க்கைத் தொடர்பு, ஐந்திணை வாய்மை, சமய ஒப்புரவு எனத் தொகுத்துக் கூறலாம்.
கழக வாழ்வு
தமிழில் முதல் இ டை கடை என முச்சங்கங்கள் இருந்தன என்பதும் முதலது கடலுட்பட்ட குமரி-பஃறுளி நாடுகளிலமைந்த தென் தன் மதுரையிலும், இடையது அதேயிடத்தில் கவாடபுரத் திலும், மூன்றாவது வைகைக்கரை மதுரையிலும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்வுபெற்றிருந்தன என்பதும் நெடு நாளைய தமிழ்நூல் மரபு. இவற்றைப் பலர் ஒப்புக்கொள்ள முடிவதில்லை, ஒப்புக்கொள்ள முடியாமைக்கான காரணங் களாவ ன: (1) சங்கம் என்பது வட சொல் (2) சங்கங்கள் பற்றிய விவரங்கள் ஆயிரம் பதினாயிரக் கணக்கான ஆண்டு, புலவர் தொகையுடையதாய், மிகைப்பட்டதாய், வட்டத் தொகை உடைய தாய்க் காணப்படுகிறது. (3) 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டுச் சங்கம் பற்றிய செய்திகள் இல்லை.
சங்க
வாழ்வின் மெய்ம்மையை ஒப்புக்கொள்ள விரும்பாதவர் இன்னொரு காரணமும் கூறுகின்றனர். இலக்கிய வளர்ச்சிக்குச் சங்கம் அமைப்பதென்பது மிக 'நவீன' கால மரபாயிற்றே, இது ‘அக்காலத்திலேயே’, ‘தமிழரிடையே' இருந்திருக்க முடியுமா? என்கின்றனர் அவர்கள்!
கடைப்பட்ட இக் கேள்விக்கு விடை எளிது. அக்காலத்தில் மட்டுமென்ன? இக்காலத்தில்கூட ‘நவீன' மேல் நாடுகளில் பிரான்சு தவிர எங்கும் திட்டமமைந்த இலக்கிய மொழிக் கழகங்கள் இல்லைதான்! தமிழர் குறிப்பிடும்படியான கழகம் முக்காலத்திலும் துவரை வேறெங்கும் உண்மையில் இருந்ததாகத் தெரிய வில்லை. இதனால் அது தமிழ்க்கே சிறப்பு எனப்படத் தக்கதேயாகும்.
மேலும் இது 'நவீனம்' என்பவர்களே, முன்னுக்குப்பின் முரணாக, 'ஒருவேளை சமணர் சங்கங்களை யெண்ணி இம்மரபு தோற்றியிருக்கலாம்' என்கின்றனர். சமணர்க்குத் தோற்றக் கூடியது தமிழர்க்குத் தோற்ற முடியாது போலும்!