பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

179

சங்கம் என்ற சொல் வடசொல் என்பவர் பட்டி, மன்றம், கழகம், கூடல் முதலிய சொற்களும் வழங்குவதை மறந்தனர், சங்கக் கட்டடமே பட்டி மண்டப மெனப்பட்டது. மேலும் சங்கம் வடசொல் என்பவர் அது வடமொழிச் சொல்தானா என்று ஆராய்வார்களாக! வடமொழியோடொத்த பிற ஆரிய மொழிகள் எதனிலும் அச்சொல் இல்லை. எனவே தூய ஆரியச் சொல் அல்லாத பெரும்பான்மை வடமொழிச் சொற்களில் அது ஒன்று என்பதை அவர்கள் அறிவார்களாக! கழகம் என்பதைக் கலகம் என்று எள்ளிப் பேசியும் வடமொழிக் 'கடிகா’ வின் சிதைவே என்று இன்பக் குழப்பம் எய்தி உழல்பவர்கட்கும் இதுவே தக்க விடையாயமையும். ஏனெனில் 'கல' என்பதே அதன் பகுதியாகும்.

'சங்க' மரபுரைகள் மிகைப்பட்டிருப்பதும், ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் அதாவது தேவார, பெரியபுராண, கம்ப ராமாயண காலங்களில் அடிபடுவதும் உண்மையே. ஆனால், இவ் ஆரியமாயைக் காலத்திலிருந்த தமிழிலேயே தமிழ் இலக்கியம், கலை ஆகியவற்றையும் உண்மைத் தமிழ்ப் பண்பையும் காணும் இவ்வன்பர்கள் இவ்வொன்றில் மட்டும் தங்கள் முன்னோர்களிடம் அவ நம்பிக்கை கொள்வதேனோ! இது தவிர மற்ற எதில் அவ்விடைக் காலத்தவர்

மிகைப்படுத்தவோ போலி உண்மைகள் புகலவோ இல்லை? உண்மைச் செய்தி யாதெனில் இப்பொய்ம்மைக் காலத்தின் பொய்கள் பலவற்றையும் விரும்பித் தழுவும் இவர்கள் பொய் கலந்த இம்மெய்யில் தாம் விரும்பாத மெய்யும் கலந்து விட்டதே என்றுதான் வருந்துகின்றனர்! பாலில் நீர் கலந்துவிட்டதே என்று அழுபவர்போல, நீரில் பால் கலந்துவிட்டதே என்று அழுந் தொழிலாளரும் உண்டல்லவா?

தலைச்சங்கம் இடைச்சங்கம் பொய்ச் செய்திகளல்ல

ஒரு சார்பின்றி ஆய்பவர்கட்கு சங்ககால வாழ்வின் தன்மை மலை மேலிட்ட விளக்கம் ஆகும். இரண்டு தலைமுறைகளில் இயற்றப்பட்ட கடைச்சங்க இலக்கியமே பன்னூறாக, பல்நாடு, பல்வகுப்பு, பல்தொழில் ஆன பல்வகைப்பட்ட புலவர்களை உடையது. தொகை மிகுந்ததனால் தன்மை குறையவும் இல்லை. சங்கச் செய்யுள்களில் ஒரு சிறு செய்யுள் நூறு பெரிய