பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் 1

(180) |- புராணத்துக்கும் ஆயிரம் கம்பராமாயணத்துக்கும் மேம்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.

கடைச்சங்க இலக்கியத்தில் காணப்படும் வரலாற்றுச் செய்திகள், இலக்கியமுறை, மொழிநிலை, பண்பாடு, கலைவளம் ஆகிய அனைத்தும் பிற்காலத் தமிழிலக்கியம் எதனினும் காணப்படாத புதிய உலகம் ஆகும். இஃது ஒன்றே கடைச்சங்க மிருந்ததென்பதற்குச் சான்று ஆகும். இதனை இன்று மறுப்பவர்களும் மிகக் குறைவு. கடைச் சங்க காலத்ததாயினும் கடைச் சங்க நூல்களுள் சேராத சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் மூலமும் இடைச் சங்கநூல் எனப்படும் தொல்காப்பிய மூலமும் புறநானூறு, முத்தொள்ளாயிரம் முதலியவற்றின் மூலமும் நாம் அறியும் மொழி, கலைப் பண்பாடுகள் கடைச்சங்க நூல்களில் காணாப் புது உலகமே யாகும். எனவே இடைச்சங்க வாழ்விருந்ததும் மெய்ம்மையே என்னலாம். மேலும், அடியார்க்கு நல்லார், பெருங்கதை எழுதிய கொங்குவேள் ஆகியவர் காலம்வரை இடைச்சங்க நூல்களான குருகும் பெருநாரையும் வெண்டாளியும் இருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், அவற்றைக் கற்றே கொங்குவேள் பெருங்கதை யாத்ததாக அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். பெருங்கதை மொழி வழக்கும் செய்யுள் வழக்கும் கடைச்சங்கத்தின் வழக்கின் வேறாயிருப்பதை டாக்டர் உ.வே. சாமிநாதையர் எடுத்துக்காட்டி இக்கருத்தை வலியுறுத்துகிறார். உயர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் வெளியிட்டுள்ள புறத்திரட்டிலும் உரைகளின் மேற்கோள் களிலும் வரும் இறந்துபட்ட நூல்களின் பெயர்களும் செய்யுள்களும் தலை இடைச்சங்க நூல்கள் முடிவுக்கும், பிற நூல்கள் முடிவுக்கும் சான்று பகரும்.

சங்ககாலம் பற்றிக் குறிப்பிடும் அதே நூன்மரபு தொல்காப்பியத்துக்கு முன் அவிநயம், அகத்தியம் முதலிய இலக்கண நூல்கள் இருந்ததாகவும் அகத்தியம் தொல்காப்பியம் போல் இயல் தமிழ்க்கு மட்டு மிலக்கணமன்று, இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க்கும் இலக்கணம் என்றும் கூறுகின்றன. அறிஞர் பலர் அகத்தியர், அகத்தியம் கட்டுக்கதை என்கின்றனர். இஃது எப்படி யாயினும் ஆகுக. தொல்காப்பியத் துக்கு முன் லக்கிய இலக்கணம் தொல்காப்பியத்தினும் விரிவாக