பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

[183

பெரும் பான்மை இலக்கியமும் உடையது தமிழ் மொழி ஒன்றே. சமயத் துறையிலும் சங்ககாலச் சமயம், பிற்காலச் சமயம் போல் அருள் நெறியின் பெயரால் மருள் நெறியாகிய வகுப்பு வேற்றுமைக்கும், புரோகித ஆட்சிக்கும் சப்பைக்கட்டு கட்டாமல் உண்மையிலேயே தன்னலமகற்றிய நடுநிலையருள் நெறி பேணியதென்று காணலாம்.

சுருங்கக் கூறின் தமிழிலக்கியம் தமிழ் நாட்டவர்க்கும் தமிழுலகுக்கும் மட்டுமே யன்றி, பெருந் தமிழகமாகிய திராவிடமொழிக்குழு நாட்டுக்கும் அதன் பண்டைப் பழம்பதியாகிய இந்திய மாநிலத்துக்கும் பொது உரிமையுடைய ஓர் ஒப்பற்ற கருவூலம் ஆகும். கீழ் நாடுகளுக்கே தமிழிலக்கியம் ஓர் எச்சரிக்கை தரப்போதியது. போலித் துறவறம், கிராம வாழ்க்கையில் நிறைவு பெறல், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஆன்மிகம் என்றும் கீழைநாட்டுப் பண்பாடென்றும் தழுவி ஏமாந்து மேனாட்டின் சுரண்டலை விரும்பி ஏற்கும் இவ்வடிமை அரை

உலகு

ழந்அளையீர்நசந)க்குத் தமிழக இலக்கியம் ஒரு பெருமித மறுப்பு ஆகும். ஏனெனில் கீழ் நாட்டின் பொற்காலத்தில் திட்டமிட்ட நகரங்கள், துறைமுகப் பட்டினங்கள் உயர்தர வாழ்க்கை வசதிகள் ஆகியவை பெருகியே இருந்தன.

உலகின் சீனமொழியொன்றுக்கு அடுத்தபடியாக உலகில் மிக நீண்ட நாள் வாழ்நாள் உடைய இலக்கிய மொழி தமிழே யாகும். கடை இடை தலைச் சங்கநூல்கள் அழியாதிருந்தால், அல்லது இனி அகப்பட்டால் சீனத்தினும் அது நீண்ட வாழ்வுடையதாயிருக்கக்கூடும்.