பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(188) ||-

அப்பாத்துரையம் - 1

அனைவரும் கட்சி, மதம், குலம், நிலை வேறுபாடுகளை மறந்து, இப் பேரொலியின் கீழ், பெருமுழக்கத்தின்கீழ், ஆம்; ‘பெருமந்திரத்தின்' கீழ் ஒற்றுமைப்பட்டுவிட்டனர்.

த்தகைய அரிய ஒற்றுமையை, அரிய உணர்ச்சிப் பெருக்கை, ஒளிநிறைந்த உள்ளொளியை, உயிர்ப்பைத் தந்த சொற்றொடர் ‘மந்திரம்' - 'தமிழ் வாழ்க!' - என்பதிலே சற்றேனும் ஐயமில்லை! புழுவாய், அடிமையாய், நடைப் பிணமாய், வலிகுன்றி, வாழ்விழந்து, பற்றுக் கோடின்றிப் படர்ந்தழியும் பூங்கொடிபோல் பரந்துபடும் தமிழ் நாட்டினரின் வாழ்வை வாழ்விக்க வந்த இப் பெரு முழக்கம் தமிழரின் தனிப்பெரு 'மந்திரம்', புத்துணர்வு பெற்ற தமிழ்ச் சமுதாயத்தின் 'மூல மந்திரம்' என்பதிலே எள்ளளவும் ஐயம் இல்லை.

-

ஜஸ்டிஸ், காங்கிரசு, இந்துமகா சபை, முசுலிம் லீக்கு, சநாதனக்கட்சி இன்னும் எத்தனையோ இயக்கங்களாலும் ஒன்றுபடுத்த முடியாத தமிழ் நாட்டினரைத் 'தமிழ் வாழ்க' என்ற இயக்கம், அதன் முதற் குரலிலேயே ஒற்றுமைப்படுத்திவிட்டது.

எனவே, இதனை ‘மந்திரம்', தமிழர் புதுவாழ்வின் ‘மூலமந்திரம்' என்று சொல்லலாம். இதன் ஆற்றலால் கட்சிகள் ஒற்றுமைப்பட்டன; மக்களும் ஒன்று எனும் உணர்வு பெற்றனர்.

முன்னாளிலே ஒருசமயம், இத் தமிழ் நாட்டில் பல்வேறு சமயக் கோட்பாடுகள் நிலவின. ஒருவர்க்கொருவர் ஒவ்வாமல் பூசலிட்டுக்கொண்டே இருந்தனர். அப்போது தோன்றியது ஓர் ஒப்பற்ற தமிழ் நூல். அது நிலவிய வேற்றுமையை அகற்றி மக்களைச் சமயங் கடந்த ஓர் உண்மைச் சமயத்தை, ஒரே கடவுள் கொள்கையைக் காணச் செய்தது.

அதுதான் திருவள்ளுவனாரின் திருக்குறள். இதனை,

'ஒன்றே பொருள் எனின், வேறென்ப;- வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென

எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார்

முப்பால் மொழிந்த மொழி'

என்ற பாடல் வலியுறுத்துகின்றது.