123
இவ்வறநூல் ஏற்படுத்திய அதே ஒற்றுமையை இன்றைய தமிழர் வாழ்வில் ஏற்படுத்தியது 'தமிழ் வாழ்க' என்ற சொற்றொடர். அன்று ஒற்றுமை காண எழுந்த நூலினைத் தமிழர், தமிழ் வேதம், பொதுமறை என்றெல்லாம் போற்றினர். எனில், இந் நாளிலும் தமிழ் நாட்டினரிடை அத்தகைய ஒற்றுமை உணர்வை ஏற்படுத்திய சொற்றொடரை நாம் மறையின் உயிர் நிலையாகிய ‘மந்திரம்' என்றே கொள்ளலாம் அல்லவா? அதுவே தமிழர் மந்திரம்; தமிழரின் பெரும் பெயர்க் கடவுள்; அதனை வழுத்துவோமாக!
இந்தியப் பெருநாட்டு விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டிருந் தவர்கள் காங்கிரசுக் கட்சியினர். இந்நாட்டு மக்கள் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டிருந்தவர்கள் நடுநிலைக் கட்சியினர்.பகுத்தறிவின் பெருக்கமே குறிக்கோள் என வைத்துக்கொண்டிருந்தவர்கள் தன்மதிப்பு இயக்கத்தினர். இவர்கள் அனைவரும் இத் 'தமிழ் வாழ்க' இயக்கத்திலே கலந்து கூடினர்.
இது மட்டுமா? 'அன்பே சிவம்' என்பவர்கள் சிவ சமயத்தினர். உலகெலாம் திருமாலின் அம்சமே எனப் போற்றியவர் திருமால் சமயத்தினர். இவர்களும், மற்றும் அறிவுநெறி, வினை நெறிப் பாற்பட்டவரும் இம் மந்திரத்தை மேற்கொள்ள முன்வந்தனர்.
மேலும், மக்கட் பணியே இறைப்பணி எனக் கருதி நம் நாட்டிடையே வாழ்ந்து வரும் கிறித்தவரும், உலகெலாம் ஒரே குடி எனக் கொண்ட முசல்மான்களும், இம் மந்திரத்துடனும், அது பொறிக்கப்பட்ட கொடியுடனும் இணைந்து வீறுடன் விளங்கினர்.
இவ்வாறாகப் பலரையும் ஒன்றாகும்படி செய்த ஆற்றல் - ஒரே நாட்டினராக - ஒரே குடியினராக எண்ணுமாறு செய்த ஆற்றல், இத் ‘தமிழ் வாழ்க' என்ற மூலமந்திரம் ஒன்றுக்கே உண்டு. மந்திரம் என்றால் என்ன?
பொருள் உள்ள, அல்லது பொருள் அற்ற சில ஒலிகள், சில எழுத்துகள், அல்லது சில சொற்கள், சொற்றொடர்களே மந்திரம்.
மாந்தர் உள்ளங்களில் ஆழ்ந்து புதையுண்டு கிடக்கும் அறிவு நுட்பங்களை, அனுபவங்களை, அனுபவ உண்மைகளை,