பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190 ||-

அப்பாத்துரையம் - 1

உணர்ச்சிகளைத் தூண்டி எழுப்பிச் செயலுருப்பெறச் செய்து நிற்கின்ற சத்தியே மந்திரம்.

ஏன்

சில சமயம் அவை அங்ஙனம் மாந்தர் உளம்மட்டுமன்று, இயற்கையின் உள்ளத்தையும், தெய்வங்களின் உள்ளங்களையும்கூட இயக்குவிக்கும் ஆற்றலுடையவை என எண்ணப்படுகின்றன.

இவ் வகையிலே ஏற்புடைய ஒன்று 'தமிழ் வாழ்க' எனும் மந்திரம். அது தமிழ் நாட்டினரில் 'தமிழர்' எனும் பண்பு வாய்ந்த ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஆழ்ந்து அணைந்து எழுந்து அவர்கட்கு ஊக்கமும் உயிர்ப்பும் ஆக்கமும் எழுச்சியும் நல்கியது.

தமிழ் நாட்டிலும் பிற வேறு நாடுகளிலும் அவ்வப்போது

மந்திரங்கள் பல எழுந்தன. மக்கள் தம் வாழ்க்கையின் உட்கிடக்கையை மறந்து செயலாற்றும் திறமற்றுச் சோர்ந்தபோது பெரியார்களின் முயற்சிகளால் அவை தோன்றின. மக்களுக்குப் புத்துயிர் ஊட்டிப் புது உணர்வையும் புது வாழ்வையும் அவை அளிக்கப் பேரளவு உதவுவனவாகவும் அமைந்தன.

உணர்ச்சிக்கு ஒரு புதுமை வேண்டும். பழகிய மந்திரங்கள் உணர்ச்சி யற்ற மனிதர் நாவிற் பட்டு உயிரற்ற சொத்தைகளாகவே விளங்கும். மண விழாக் காலங்கள் போன்ற சடங்குகளிலே ஒரேபடித்தாக ஓதப்படும் மந்திரங்கள் போல வெறுங் கூலி மந்திரங்களாகிவிடும்.

அப்போது மக்களைப் புத்துணர்ச்சியாற் புதுப்பிக்க அதனால் முடியாது. அவற்றின் உணர்ச்சியை மீண்டும் மக்களிடையே புதிய உருவத்தில் எழுப்புவதற்குத் தகுந்த புதிய அமைப்புடைய புது மந்திரங்கள் எழுதல் வேண்டும். அவ்வகையில் எழுந்த மந்திரச் சொற்றொடரே 'தமிழ் வாழ்க!' என்னும் முழக்கமாகும்.

மந்திரங்கள் பலவற்றையும் போலவே இதுவும் உருவிலே சிறியதுதான்; எனில், பொருளோ மிகவும் பெரிது; பயன் அதனினும் பெரிது. இதனை ஒவ்வொரு கூறாக எடுத்து ஓதித் தமிழ்வளம் பெருக்க இனி முயல்வோம்.

உரிமைப் பெருமக்கள் ஓவாத் தமிழ்முழக்கம்

தருமால் துயில்விழிப்பு எம்-தாய்க்கு.