பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

[193

மேலும், தமிழ் பேசுவோர் மட்டுமே தமிழர் எனின், பிறநாடு சென்று பிறமொழி பயின்று வற்புறுத்தல்களுக்கிடையே கூடத் தமிழை மறவாதவரும், மறக்க நேரினும் தமிழ்ப் பற்று மாறாதவரும் தமிழரா? அல்லரா?

தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் பேசக் கற்று, அதிலே அன்பும், ஆர்வமும், திறமும் மிகுந்து விளங்கிய போப் ஐயர் யார்? தமிழிலே புலமை மிகுந்தவராகத் தமிழ்ப் பாவியற்றி புகழ்பெற்ற வீரமாமுனிவர் யார்? மேற்குறித்த வரையறையால் இவர்கள் தமிழர் அல்லர் என்றாகிறது. அவர்களை அவ்வாறு ஒதுக்குவது எவ்வளவு கொடுமை?

என் சுவைமிக்க அனுபவம் ஒன்றினைக் கேளுங்கள்.

நெல்லை மாவட்டத்திலே கிறித்தவ சமயத் தலைவராயிருந்த மேலை நாட்டார் ஒருவரை, அவர் பள்ளி முதல்வராயிருந்தபோது ஒருநாள் காணச் சென்றேன். அவர் வெளியிலே சென்றிருந்தார். சிறிது நேரம் அங்கே கிடந்த நாற்காலிகளிரண்டில் நானும் என்னை அழைத்துச்சென்ற நண்பரும் அமர்ந்தோம்.

அவர் மேசையைக் கவனித்தேன். தமிழ் நூல்களே எம்மருங்கும் காட்சியளித்தன.

அவர்தம் கைப்பட வடசொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் தேடி எழுதிய சிட்டை ஒன்றும், தமிழ் நாட்டு நாடோடிப் பாட்டுகளென வெளியிடுவதற்காகத் தொகுத்த தொகுதி ஒன்றும் மேசைமீது கிடந்தன. கண்டு வியப்படைந்தேன்.

அவ் வெள்ளையர் தமிழர் - ஆம்! வெள்ளையராயினும் தமிழரே! அவர் வந்தபின் நிகழ்ந்த நிகழ்ச்சியோ அவ்வியப்பை மேலும் எண்மடங்கு பெருக்கிற்று.

அவ் வெள்ளையர் வரவுக்கு விதிர்விதிர்ப்புடன் காத்திருந்த நான், அவர் வந்தவுடன் ஆங்கிலத்தில் ஊறிப் பெற்ற என் இயற்கை ஆங்கில ஒழுக்கைக் காட்டி, 'குட்மார்னிங்' என்று கூறினேன். கூறினதுதான் தாமதம், அவரது விடை என்னைத் தூக்கிவாரிப் போட்டது."ஏன் அன்பரே, உம் தாய்மொழியிலேயே வணக்கம் என்று சொல்லலாமே" என்றார் அவர். புலிக்குட்டிஎன் முன் நின்று உறுமுவது போலிருந்தது எனக்கு. கனாக் கண்டு