பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(194) ||.

அப்பாத்துரையம் - 1

விழித்தவனின் அரைதுயில் பார்வையில் பொங்கி ஆரவாரிக்கும் மகன் தோற்றிய தன்மைபோல் இருந்தது. நான் வியப்பும் திகைப்பும் மகிழ்ச்சியும் கொண்டு சற்று விழித்தேன். என் தோல்வியுணர்ச்சியை மட்டும் காட்டாமல், அவரது தமிழை உதறிவிட்டு, ஆங்கிலத்திலேயே “ஆம் தங்களுக்கும் அப்படித் தானே” என்று கூறினேன். அவர் சிரித்தார். அன்று நான் தப்பினேன்.

தப்பினும் உள்ளூர என் மனம் மட்டும் என்னைப் புண்படுத்தாமலில்லை. என் ஆங்கிலப் பற்றென்னவோ ஒரு நடிப்புத்தான் என்பது எனக்குத் தெரியும். அடிமை நாட்டான்

ள்பவன் மொழியில் கொண்ட பற்று அது! அடிமை உணர்ச்சியையும் போலிப் பசப்பையும் அன்றி, அது வேறு எதனைக் குறிக்கக் கூடும்?

ஆனால் ஆளும் குழுவினருள் ஒருவரான அவர் தமிழிற் கொண்ட அன்பு அவ்வாறல்லவே. 'அவர் தாய்மொழி ஆங்கிலம்' எனச் சொல்லுக்குச் சொல் நான் கூறியபோது அவர்முகம் பட்டபாட்டைப் பார்த்தல் வேண்டுமே! இக் கசப்பான உண்மையை அவர்க்கு, ஏன் எடுத்துச் சொன்னோம் என்றாயிற்று எனக்கு.

அத்தகைய வெள்ளையர் தமிழர் அல்லர் -நானும் நீங்களும் மட்டுந்தான் தமிழரா?

ஆகவே, தமிழ் பேசுவோர் தமிழர் என்ற வரையறையும் அவ்வளவு பொருத்தமுடையதாகக் காணப்பெறவில்லை.

அப்படியாயின் தமிழர் யார்?

'தமிழினிடம் பற்றுதல் கொண்டவர் மட்டுமே தமிழர்' என்று கூற யான் விரும்புகிறேன். தமிழ் நாட்டில் வந்து தமிழ் பேசிப் பழகியவரை - தமிழ் கற்றவரை தமிழ் கற்றவரை -தமிழ்ப்பற்று உடையவரையெல்லாம் அது தமிழருட்படுத்துவது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது.

ஆனால், தமிழைப் புறக்கணித்து ஆங்கிலங் கற்றவர் தமிழ்க்கு முந்தி இந்தியோ ஆங்கிலமோ, வடமொழியோ பிறவோ கற்றோம் என்றும் தமிழில் பழக்கமில்லை, அவற்றிலேயே பழக்கம் என்றும் அம் மொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்

-

-