பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம் சொற்கள்

[195

ல்லையென்றும், தாம் அறியோம் என்றும் சொல்பவர்கள் இருக்கின்றார்களே, அவர்களை எல்லாம் 'தமிழர்' அல்லர் என்று விலக்குவதா?

வை

தமிழ்ப் பத்திரிகைகள், தமிழர் பத்திரிகைகள் தமிழ்க்கும் தமிழர்க்கும் புறம்பானவை என்று கூறிவிடலாமா? கூறிவிடலாம் என்று கூறவே நான் விரும்புகின்றேன். அதற்கு அவர்கள் மன்னித்தல் வேண்டும்.

ஆனால், தமிழ்ப்பற்று மிக்க பெரியாரான குமரன் ஆசிரியர் முருகப்பா அவர்கள், அவர்களும் தமிழர்கள் என ஆர்வத்துடன் காட்டுகின்றார்கள்.

'ஒருவன் உறங்கும்போது கன்னத்தில் அறைந்துவிட்டால் எம் மொழியில் அவன் திட்டுவானோ அதுவே அவன் தாய்மொழியெனக் கொள்ளத் தகும்' என்பர் அவர்.

சிலர், தொன்றுதொட்டு பேசுபவர்தாம் தமிழர் என்பர்.

வழிவழியாகத் தமிழ்

தமிழ் எழுத்துகள் 'தெய்விக எழுத்துகள்' என வீறுடன் காட்டிய மாணிக்க நாயகர், “தமிழ் நாடு" பத்திரிகை தோற்றுவித்த தமிழ் அறிஞர் நாயுடு, தமிழ் நாட்டு நாட்டுரிமைக் கழகத்தில் செயலாற்றிப் பின் தமிழரிடைப் புத்தியக்கம் தோற்றுவித்த பெரியார் ஈ.வெ.ரா. ஆகியவர்கள் தொன்றுதொட்டு, வழிவழித் தமிழ் பேசாதவராயினும், இன்று தனி முழுத் தமிழர் அல்லரா?

‘தமிழர் யார்...?' என்று இத்தகைய ஆராய்ச்சியாலும் துணியக் கூடவில்லை என்று காண்கிறோம்.

இனி, உலக வழக்கு இதனைத் தெளிவுபடுத்துமா என்றும் பார்ப்போம்.

தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிடையே “தமிழாதி" என்ற ஒரு சொல் வழக்கிலிருக்கின்றது. அது யாரைக் குறிக்கின்றது? யார் எக் கருத்துடன் அதனை வழங்குகின்றனர் என்று பார்ப்போம்.

சில இடங்களில் ஒருவரிடம் இவ்வூரில் எத்தனை வீடுகள் என்று கேட்டால், பெரும்பாலும் இதில் அவ்வகுப்பினர் வீடு