196 ||-
அப்பாத்துரையம் - 1
இத்தனை, பிற குறிப்பிட்ட பணக்கார வகுப்பினர் வீடு இத்தனை என்று குறிப்பிட்டு, போகத் தமிழாதிகள் இத்தனை என்பர். பணக்காரர் எவ்வகுப்பினராயினும், எப்போதும் அவரைத் தம்முடன் சேர்த்தே கூறுபவர் அச் சிலர்.
செல்வர் வாழும் இடங்களிலே குலத்திமிர் கொண்ட செல்வரும், அரைகுறை அறிவு பெற்றோரும், அரசியல் பணிபெற்று உயர்ந்த சிலரும், தம்மை ஒரு தனிப்பட்ட “உயர்ந்த’ வகுப்பினர் என்று கொண்டு, பிற மக்களைத் “தமிழாதி" எனப் பொதுப்படையாகக் குறிக்கின்றனர்.
தாமே பிறரைத் 'தமிழாதி' எனக் குறிப்பதால், இவர்கள் தம்மைத் தமிழர் ஆகக் கொள்ளவில்லையோ என்ற ஐயம் நமக்கு எழுகின்றது.
இவர்கள் ஏன் பிறரைத் 'தமிழாதி' என்கின்றனர்? தாமும் தமிழ்தானே பேசுகின்றனர்!
தாம் தமிழரை வென்றடக்கிய குழுவினர் என்றும், நாட்டு மக்களாகிய பிறரே தமிழாதி என்றும் குறிக்கின்றனரா? அல்லது தமிழன்றிப் பிறமொழி அறியாதார் அவர், தாம் பிறமொழிப் பயிற்சியும் பற்றும் உடையவர் என்றா? அல்லது தமக்குத் தமிழ்த் தொடர்பேயன்றிப் பிறமொழித் தொடர்பும், பிறமொழியாளர் தொடர்பும் உண்டு என்ற செருக்கினாலா? ஏன் இங்ஙனம் கூறுகின்றனர்?
இவை ஒன்றோ, பலவோ, எல்லாமோ இவ் வழக்கின் அடிப்படை என்று எண்ணலாம். எப்படியாயினும், இவர்கள் “தமிழாதி” என்று தம்மாற் சூட்டப்படும் மக்களைத் தம்மினும் இழிந்தார் எனக் கொள்கின்றனர் என்பது மட்டும் வெளிப்படை.
அப்படியாயின் தமிழர்-உண்மைத் தமிழர், தமிழ் நாட்டிற் 'கீழ் வகுப்பு' என ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் தாமா?
மேனாட்டவருள் சிறந்த தமிழ் அறிஞரான கால்டுவெல், இதற்கு ‘ஆம்' என்று கூறுவர். சேர நாட்டுப் பகுதியாகிய திருவாங்கூரில் இன்று பெரும்பாலும் மலையாளமே நாட்டு மொழியாக நிலவுகின்றது. அங்கேயும் மலையாளப் பகுதியின் உட்பகுதியில் தமிழ்நாட்டுத் தொடர்பற்று வாழும் 'பரவர்'