பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

[197

இன்றும் தமிழே பேசுகின்றனர். அது மட்டுமன்று. மலையாளம் அவர்கள் நாக்கில் சற்றும் வருவதில்லை. தமிழ்நாட்டிலும் ஆங்கிலம், வடமொழி, மொழி, இந்தி ஆகியவற்றுக்கு முன்பின் தயக்கமின்றித் துள்ளிக்குதித்து ஆதரவு தேடுபவர், உயர் வகுப்பினர் எனத் தம்மைத் தாமே சூட்டிக் கொள்பவரேயன்றிப் பாமர மக்களல்லர்.

தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களை வலியுறுத்திக் கலப்பவரும், தமிழ்ச் சொல்லிருக்க அதனைக் கையாளாமல் திசைச்சொற்கள், வட சொற்களையே கையாண்டு, தமிழ்ச் சொல்லை மறையச் செய்து தமிழ் வளம்குன்றச் செய்பவரும், பிறமொழி கற்ற உயர்குல வகுப்பாரே யன்றிப் பொதுமக்கள் அல்லர் என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. உடல் வலியாமல் தமிழ்நாட்டில் வெற்றி கொள்ள எண்ணிய எல்லாப் பிறநாட்டுப்

யெடுப்பாளர்களுக்கும், உள்நாட்டிலேயே ஐந்தாம்படை வேலை செய்து, பகைவரின் வெற்றிக்கும் ஆட்சிக்கும் உதவுவது இம் மேற்குலத்தார்தாம் என்பதையும், இவர்கள் மக்கள் தொகையுள் ஒரு சிறுபான்மையினரே என்பதையும் நோக்க, இவர்களை விலக்கிப் பொதுமக்களை மட்டுமே 'தமிழர்' என வழங்க எழுந்த இவ்வியற்கை வழக்கு மிகவும் பொருத்த முடையதென்றே கூறுதல் வேண்டும்.

இக்கருத்துக்கொண்டே போலும் ‘ஒதுக்கப்பட்ட மக்கள்’ இன்று யாவராலும் ‘திருக்குலத்தார்' என்றும், ‘ஆதித் திராவிடர்’ அதாவது ‘முதல் தமிழர்', முன்னைய தமிழர்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

தெலுங்கு நாட்டிலும், கேரள நாட்டிலுமுள்ள ஒதுக்கப்பட்ட மக்கள்கூட இதற்கிடையே ‘ஆதி கேரளர்’, ‘ஆதி ஆந்திரர்' எனப்படுதல் கூர்ந்து நோக்கத்தக்கது.

இதுகாறும் கூறியவற்றைத் தொகுத்துக் கூறின், தமிழ் பேசுவோர், தொன்று தொட்டுப் பேசுவோர், தமிழ்ப் பற்றுடையோர், தமிழரிடைப் புறக்கணிக்கப்பட்டிருப்போர் இவர்கள் யாவரும் ஒரு வகையாகத் 'தமிழர்' எனவே கூறப்படுகின்றனர். எனினும், இறுதியில் கூறப்பட்டவர் சிறப்பு வகையால் ‘முழுத் தமிழர்' ஆவர் எனத் தோற்றுகின்றது.