198
அப்பாத்துரையம் 1
—
இதனை இனி இன்னும் ஒருவகையிலும் காட்டுவோம்.
தமிழரிடைத் தமிழாதியரை ஒதுக்குவோர் அங்ஙனம் ஒதுக்குவதன், உட்கிடக்கை யாது? தமிழாதியரைவிட அச்சிலர் - அவரைத் தமிழ்ப் பகைவரென்றாலும் தவறில்லை - எவ்வகையில் உயர்வுடையார் என்று தெரியவில்லை.
பிறப்பினால் அவர்கள் உயர்வு என்பர் சிலர்.
பிறமொழிப் பயிற்சியினால், அல்லது பொதுப்பட அறிவினால் உயர்ந்தவர் என்பவர், இன்னுஞ் சிலர்.
பணத்தினால், நாகரிகத்தினால், சமயத் தலைமையால் என்பர் வேறு சிலர்.
எப்படியாயினும், அவர்கள் உயர்வு நாடுகின்றனர்; உயர்வால் நலனும் சிறப்பும் நாடுகின்றனர் என்பது மட்டும் தேற்றம்.
இங்ஙனம் நாடுபவர் தமிழரா? அல்லர் தாமே!
தமிழரிடையே தமிழாதிகள் அறிவு, அன்பு, ஆற்றல் ஆகியவற்றில் எளியவர் என்னல் கண்கூடு. ஆனால், வையனைத்தின் வித்தும் அவர்களிடையே உண்டு. எல்லாம் சிறுமைப்பட்டுச் சரியொத்துச் சீர்கெட்டுக் கிடக்கின்றன அவர்களிடத்தில்.
இவர்களைவிட அறிவின்மிக்க வகுப்பார் உளர். அவர்களிடை ஆற்றல் குறைவு; அன்பு மிகமிகக் குறைவு. அவர்கள் இவர்களினும் மேம்பட்டவராம்! ஆனால், சரியொத்த மேம்பாடு அல்லது வளர்ச்சி பெறாது ஒரு சார்பு வளர்ச்சியடைந்தவர் ஆவர். உடல் வளராது கால் வளர்ச்சி அல்லது தலைவளர்ச்சி, முன் பகுதி வளராது புறப்பகுதி வளர்ச்சி எய்தியவர்களைப் போன்ற, அருவருக்கத்தக்க பிறவிகளேயாவர் அவர்கள்!
இவர்களைவிட ஆற்றலின் மிக்கவர் உளர். ஆனால், அவர் அறிவு குறைந்தவர்; அன்பும் குறைந்தவர்.
இவர்களைவிட அன்புமிக்க வகுப்பார் மட்டும் இல்லை. இருந்தால் அவர்களை ஒதுக்கி விலக்கார்; விலக்கி வேறாகப் பிரித்துத் “தமிழாதி” என்று கூறார் அன்றோ?