பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

[199

ஆகவே, இத் தமிழாதிகளான ஒதுக்கப்பட்ட மக்கள் உலக வழக்கினாலும், அரசியல் வழக்கினாலும் கூறப்படுவது போலவே, உண்மையிலேயே முழுமையாகத் 'தமிழர்' எனல் தெளிவு. ஏனெனில், இவர்கள்தாம் சரியொத்த வளர்ச்சியுடைய தமிழ் மக்கள் ஆவர்.

இவர்கள் அறிவிலும் ஆற்றலிலும் அன்பிலும் சரியொத்து மேம்படின் அறிவு மேம்பாட்டுடன், ஆற்றலும், செயல் திறமும், அமைப்புத்திறனும் பெற்று முழு வளர்ச்சியுற்ற, மேம்பட்ட தமிழராய் விளங்குவர் என்பதில் ஐயமில்லை. இதற்கு மாறாக ஒரு சார்பு வளர்ச்சியுடைய தற்கால “உயர்குலத்தார்” எனப்படுவோர், அருவருக்கத்தக்க வேறுவேறு உறுப்பு வளர்ச்சியுடையவராய், அன்பின்றி அறிவும், அறிவின்றி ஆற்றலும் உடையவராதலின், 'தமிழராகார்' என்றும் கூறலாகும்.

உண்மையில் தமிழரிடையே எவரையும் பிறப்பாலோ, கல்வித்திறம், செல்வம், ஆற்றல் இவற்றின் குறைபாட்டினாலோ விலக்கிவைக்க நாடுபவர், தம் அறிவை, ஆற்றலை, அன்பைத் தமிழர் அனைவர்க்கும் பயன்படுத்தாமல், தமக்கு மட்டுமோ அன்றித் தனிப்பட்ட ஒரு குழுவினர்க்கு மட்டுமோ பயன்தரும்படி ஒதுக்கிவைக்க விரும்புபவர் விரும்புவதாகக் காட்டிக்கொள்பவர், விரும்புபவர் குழுவிற்பட்டவர், அத்தகைய குழுவுக்குத் துணை தருபவர், அதனை விட்டு நீங்க அல்லது அதனை ஒறுக்கத் தயங்குபவர் ஆகிய எவரும் தமிழராகார். தமிழர் அனைவரும் ஒன்றெனக் கொள்பவரே உண்மைத் தமிழர்.

“கங்கையொடு ஈழம் கடாரம் கடன்கொண்டார் வண்கை வழங்கினர் வந்து.'