தமிழ் முழக்கம்
201
தமிழகத்தையே ஒருங்கே தட்டியெழுப்பி, இதுவரையிலும் பிற மந்திரங்கள் காணாத ஒற்றுமையை ஏற்படுத்தியது.
உடன்பிறப்பாளர் தம்முள் ஒற்றுமைப்படத் தாயினும் தாயன்பினும் சிறந்த கருவியுண்டோ? உடலைச் சுமந்து - பெற்ற தாயின் அன்பு இஃது ஆயின், உடலையும், உடலைச் சுமந்த தாயையும், தாயின் தாயையும் பெற்று, உடலைத் தாங்க உதவும் இயங்கியல் நிலையியற் பொருள்கள் யாவையும் சுமந்து, ஈன்று காத்த தமிழ் நாட்டன்னை அன்பும், அவ்வுடலினுள் நின்று கூத்தாட்டும் உயிரினையும், அதன் அறிவாற்றல் அன்புப் பகுதிகளையும் ஆக்கி வளர்த் தோம்பும் தோம்பும் உயிர்மொழி யன்னையாம் தமிழின் - தமிழ்த் தாயின் அன்பும், ஏன் தமிழரை ஒற்றுமைப்படுத்தாது? தமிழ் மொழிக்கு, தமிழ் நாட்டுக்குப் புறம்பாகச் சென்று நாடியன அங்ஙனம் ஒற்றுமைப்படுத்தாத திலும் வியப்பு என்ன?
ஒருவனது தாய்மொழியைத் 'தாய் மொழி' என்பது வெறும் அழகுக்காக மட்டும் அன்று. அது பலவகையில் தாயினும் சிறந்தது என்பதனாலேயாகும். தாய்ப் பாலே குழந்தையின் வளர்ச்சிக்கு வேறெவ்வகை உணவினும் சிறந்தது. அதுபோல் ஒரு நாட்டு மக்கள் இயற்கை வாழ்வினுக்கும், வளர்ச்சிக்கும், அறிவியல், கலை ஆராய்ச்சிப் பெருக்கங்களுக்கும் மூலமாவது தாய் மொழியேயன்றி வேறொன்றுமில்லை. எந்தப் பயிற்சி பெற்ற ஆசிரியனினும் தாய் தன் குழந்தைக்கு முதன் முதல் அறிவுரைகளையும் நடைப் பயிற்சிகளையும் திறம்படவும் எளிதாகவும் உண்டுபண்ணுவதுபோல், தாய்மொழியும் அவர்களுக்கு அறிவும் வீரமும் ஊட்டும். தன்மதிப்பும், தன்னிலையும் வாழ்வும், வளர்ச்சியும் அளிக்கும். ஆகவே, பெருமையும் புகழும் விரும்பும் மக்கள், எப்பாடுபட்டும் தம் தாய் மொழியை, தாய்மொழியின் பண்பை, தாய்மொழியின் பொருட் வைகளை உணர்ந்து போற்றிப் பேணிவரல் வேண்டும். அங்ஙனம் போற்றாத குறையினாலேயே - நெடுநாள் பிறர் வயப்பட்டு - அரசியலில் மட்டுமன்றி, சமயம், வாழ்வியல், அறிவியல், கலை, பொருளாதார வகைகளிலும் அடிமைப்பட்டுக் கிடந்தோம். தமிழ் மொழியும், இலக்கியமும், சமயம், வாழ்வியல் பகுதிகளும் சீரழியலாயின. இந்நிலையிலிருந்து படிப்படியாகத்