(202) ||
அப்பாத்துரையம் - 1
தமிழர் தம்மையறிந்து, தம்மைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அங்ஙனம் அறிய உதவுவது எது? அது தாய்மொழிப் பற்றேயாம். அதனை அடிப்படையாகக்கொண்டால், 'தமிழர் யார்?' என்னும் வினாவுக்குத் ‘தமிழ்த் தாயைப் போற்றுவோர்' என்று எளிதில் விடை பகரலாம். தமிழர் நண்பர் யாரெனில், தமிழ்த் தாயின் வயிற்றிற் பிறவாத போதும், பிறந்தோமில்லையே என்று வருந்தும் பிறமொழிப் பிறந்த நன்மக்களேயாம். பகைவர் யாரெனில், தமிழராய்ப் பிறந்தும் தமிழரிடையே ஒரு சாராரையோ, பலரையோ புறக்கணித்தோ ஒதுக்கியோ வாழ எண்ணுபவரும், நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழினைத் தணிக்க அல்லது பிறிதொரு மொழிக்குத் தமிழரிடையே தமிழினும் உயர்வு கொடுக்க, அல்லது தமிழ்ப் பற்றின் பேரால் அப் பிறமொழிக்கு ஆதிக்கம் தேட முனைபவரேயாவர்.
ம்
ஒற்றுமைக்குத் திறவுகோலாகவும் உயர்வுக்கொரு மாத்திரைக் கோலாகவும் விளங்கும் இத் தாய்மொழிப் பற்றுடையவரே, "தமிழ்த்தாய் வாழ்க” என்னும் மந்திரத்தை உரத்துக் கூற உரிமையுடையவராவர். அது தமிழ்த் தாய்ப் பற்றினுக்கு அறிகுறி மட்டுமன்று, தமிழ்த்தாய்ப் பணிக்கு ஓர் அறை கூவலுமாகும். அம் மந்திரத்தை முழக்குவோர், தமிழின், தமிழ்த்தாயின் இன்றைய நிலையைக் கண்டு சற்றும் மனம்பொறாது வீறுடன் எழுவர் என்பது உறுதி.
தமிழரின் தாய்மொழி என்றவகையில் தமிழ்நாட்டில் தமிழ்க்கே முதலிடம் என்றால், அஃது இயற்கையான ஒரு செய்தியே என்றும், அதனை யாவரும் விரும்புவர் என்றும் ஒருவரும் எதிர்க்கமாட்டார் என்றும் சிலர் எண்ணக்கூடும். அவ்வாறு எண்ணுதல் இயல்பும்கூட. ஆனால், உண்மை எவ்வளவோ மாறுபாடாயிருக்கிறது. தமிழ் நாட்டின் அரசியலில், சமயவாழ்வில், கல்வியில், தொழிலில் ஒவ்வொரு துறையிலும் ஏதாவது ஒரு பிற மொழிக்கே முதலிடமாயிருந்து வருகிறது.
அரும்பாடுபட்டு உழைத்த தமிழ்ப் பணியாளர் பலரது தொண்டின் பயனாக, அரசியலார் அண்மையில் தமிழன்னையின் புண்களை ஒரு சிறிது ஆற்றும் மருத்துவம் ஒன்றைச் செய்தனர். அதாவது இந்நாட்டுப் பள்ளிகளில், ஆங்கிலம் நீங்கப் பிற