தமிழ் முழக்கம்
பொருட்பாடங்களையெல்லாம்
203
தமிழ் வாயிலாகவே
கற்பிக்கலாம் என ஏற்பட்டது. அங்ஙனம் செய்வதால் பாடங்கள் எளிதில் மனத்திற் பதிவதோடன்றி, ஆங்கிலத் தேர்ச்சிகூட உயர்வுபெறும் என்றனர் கல்வித் துறை அறிஞர். ஆயினும், அச்சீர்திருத்தம் எதிர்பார்த்த முழுப்பயனும் தரவில்லை. அதன் காரணங்களை நோக்கினால் அச் சீர்திருத்தத்தின் குறைபாடுகள் விளங்கும். சிற்சில இடங்களில் இத் தமிழ்ப் பாட முறையால் ஆங்கில அறிவு குறைபடுகிறதென்றும், பலப் பல தாய்மொழி பேசப்படும் இடங்களில் தாய்மொழிப் முட்டுப்பாடுடையதென்றும் கூறப்படுகின்றது.
-
பாடம்
இவற்றுள் பிந்திய குறைபாட்டினை நடுநிலையும் வன்மையும் உடைய ஓர் அரசியலால் மட்டுமே நீக்க முடியும். அல்லது விட்டுக்கொடுப்பு இன்று தமிழர் தவிரப் பிறரிடம் காணாத விட்டுக்கொடுப்பு என்ற ஓர் உணர்ச்சியால் மட்டுமே முடியும். அதாவது நேர்மையையும், ஒரு சார்பின்மையையும் பின்பற்றி எத் தாய்மொழி மிகுதியோ அது அப் பகுதியின் மொழியாகக் குறிக்கப் பெறல் வேண்டும். இதுபோக, முதற் குறையோவெனில் இன்றைய ஆங்கிலப் போதனையின் குறைபாடேயாகும். ஆங்கிலம் பிறமொழியாதலால் அதனைக் கற்பிக்கத் தனி ஆசிரியர் வேண்டும். அவர் பிற பாடம் போதிப்பவராய் இருத்தல் கூடாது. அன்றியும் அவர் நன்கு தமிழறிந்தவராய் இருந்தாலன்றித் தமிழர்க்குக் கற்பிக்கவும் முடியாது. கூடுமான இடங்களிலெல்லாம் அவர் தமிழ் மரபையும், ஆங்கில மரபையும் ஒப்பிடத் தெரிந்தவராயிருத்தல் வேண்டும். அதேபோல் தமிழிலக்கணம் ஆங்கில இலக்கணம் இவற்றை ஒப்புமை செய்பவராகவும் இருத்தல் வேண்டும். தமிழ்மொழி வாயிலாக ஆங்கிலம் முதலிய பிற மொழிகளைக் கற்பித்தால், எளிதாக அம் மொழிப்பயிற்சி ஏற்படும் என்பது கைகண்ட உண்மை. ஆங்கிலமேயன்றி வடமொழி முதலிய பிறமொழிகளிலும்
லக்கணம் கற்பிப்போர் அம்மொழி இலக்கணத்துறைச் சொற்களை வழங்காது, தமிழ்ச் சொற்களையே வழங்கினால் மாணவர் உள்ளத்தில் அம்மொழியறிவும் இலக்கணமும் நன்கு பதியும். ஆகத் தமிழுணர்ச்சி குன்றியதால் பிற மொழிப் பயிற்சிகூடத் தமிழரிடையே குன்றுவதையுங் காணலாம்.