பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




206

அப்பாத்துரையம் - 1

பணிகள் தரும் வகையில் வெறும் போட்டி சிறந்ததன்று. வாழ்க்கைப் போட்டியில் முந்திக் கொண்டவர்கள் போலி ஒப்புநிலையை நிலைநாட்டி எல்லாம் போட்டிக்கு விடுக என்பர். அப் பணிகள் எல்லார்க்கும் ஒப்பக் கிடைக்கும் வகைகளையும், அதற்கான கல்வி எல்லாரிடையும் ஒப்பப் பரவும் வகைகளையும் அரசியலார் கவனித்தல் வேண்டும். இந்நாட்டில் ஒரு காலத்தில் ஆளுங் கட்சியினர் அத்தகைய பணி ஒப்புரவை நோக்கமாகக் கொண்டிருந்தனர். இன்றைய ஆட்சியிலுள்ளார் அதனை ஏற்காது போலி வேதாந்தம் பேசி மழுப்பு வதனாலேயே நாட்டில் சாதி சமயக் குழப்பங்கள் நிறைவதும் ஆராய்பவர்க்குப் புலனாகும்.

இவ்வுயர் சீர்திருத்த நிலை ஏற்படும் வகையில் அரசியலார்க்கு வழிகாட்டியாய் அமைய வேண்டுபவர் இந்நாட்டுச் செல்வரேயாவர். அதிலும் இவர்களுட் பலர் வேலைக்காகப் படித்தல் வேண்டும் நிலையிலில்லாதவர், அவர்கள் வேலை தேடும் தேர்வுப் பித்தராகாமல் அப் பித்துக்குப்

பக்கமேளமடித்து வயிறு வளர்க்கும் கூலிப் படையினரை ஆதரிக்காமல், நாட்டில் உண்மைக் கல்வி வளர்க்கும் முறையில் தனிப்பள்ளிகள் பல அரசியல் சார்பற்ற முறையிலே நடத்தலாம். அல்லது அரசியற் சார்பிலுள்ள பள்ளிகளையே உயரிய திட்டங்களில் இணைத்து நடத்தலாம். அத்தகைய தமிழ்ச் ‘சாந்தி நிகேதனங்கள்’, ‘விசுவ பாரதிகள்' நாடெங்கும் எழவேண்டும். ஆனால், அவை வகுப்புவாத மடங்கள் போலாகாமலிருக்கவும் வேண்டும்.

இதுவரை தமிழரின் தாய்மொழி என்ற வகையில் தமிழ்க்குச் செய்ய வேண்டிய தொண்டுகள் எவை எனச் சில கூறினோம். ஆனால், 'தமிழ்' தமிழரின் தாய்மொழி மட்டுமின்றி, உலகில் ஒப்புயர்வற்ற ஒரு தனிக் குழுவின் குறியீட்டு மொழி நடுநாயக மொழி - தொன்மொழியாகவும் நிற்கின்றது.

-

க் குழுவினைத் திராவிடக் குழு என்றும் தமிழ்க்குழு என்றும் கூறுவர். திராவிடம் என்ற பெயர் வடமொழியில் தமிழையே குறிப்பது. ஆகவே, குழுவின் பெயரே அது 'தமிழைத் தாயகமாகக் கொண்டது' எனக் காட்டும்.

வடநூலாசிரியரான குமாரிலர் தம் காலத்தில் இக்குழுவில் திராவிடம், ஆந்திரம் என இருபகுதிகளே இருந்தன எனக்