பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

""

[209

ஆகவே, முதலில் "தமிழ்த்தாய் வாழ்க க என்பது தாய்மொழி என்ற வகையில் அவரவர் தாய்மொழி வாழ்க எனக் குறிக்குமாயினும், பரந்து ஆராயின், உண்மையிலேயே அத் தாய்மொழிகட்கெல்லாம் தாயாகிய-முதல் தாய்மொழியாம் ‘தமிழ்த்தாய் வாழ்க' என்று விளங்கக் கூறி, அம்மந்திரம் தமிழர்க்கு மட்டுமேயன்றித் தமிழர் மேம்படும் காலத்தில் உலகுக்கே உறுதிப் பயனுடையது எனவுங் காட்டலாகும்.

ஆனால், இத்தனை தாய்களுக்கும் தாயாகும் பேறுபெற்ற தமிழ், இன்னும் அவற்றால் சோர்வு பெறவில்லை. அவள் அடையும் சோர்வெல்லாம் அவள் மக்கள் அடைந்த-அதுவும் தற்காலிகமாக அடைந்த-சோர்வேயாம். இதனாலேயே, இத் தமிழன்னையைத் தமிழ்ப் பெரியார் மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் கன்னித் தாயென மனத்துட் கொண்டு,

66

'கன்னடமும் களி தெலுங்கும்

கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித் தெழுந்தே ஒன்று பல வாயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம் வியந்து

செயல் மறந்து வாழ்த்துதுமே!”

-

வரலாற்று

என்று பாடினார். தமிழரின் நினைவுக்குள் நாள்களுக்குள் எண்ணினால், அது தோன்றி-எத்தனையோ தலைமுறைகள் ஆகிவிட்டனவே! இத்தனை நாளிலும் தமிழ் அன்றிருந்ததுபோல இன்றும் பிறரது ஒரு தலைமுறையை ஒரு பகல் ஓர் இரவாகக் கழித்து விழித்தெழுந்தும், சோர்ந்து துயின்றும் கழிக்கின்றாள் என்று காணலாம். ஆகவே, இத் தமிழ் வகையில்,

“எனக்குத் தாயாகியாள் என்னையிங் கிட்டுத் தனக்குத் தாய்நாடியே சென்றாள்- தனக்குத்தாய் ஆகியவளும் அதுவானால் தாய் தாய்கொண் டேகு மளித்திவ் வுலகு”