4. தமிழ்ப் பண்பு வாழ்க!
உலகில் தொன்மைமிக்க மொழிகளுள் தமிழ் ஒன்று. ஆனால், அத்தொன்மை மிக்க மொழிகளுள் தமிழ்க்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏனைய தொன்மொழிகள் யாவும் இஃது ஒன்று நீங்கலாக இறந்துபட்டுவிட்டன. இஃது ஒன்று மட்டுமே உயிருடைய தான்மொழியாய் நின்று நிலவுகின்றது. அப்படியாயின், அத்தொன்மொழிகள் எதிலும் இல்லா ஓர் அரிய பண்பு இத் தமிழ் மொழியில் இருக்க வேண்டுமென்றோ? அப்பண்பை அறிந்து அதனை நாம் போற்றிக் காப்போமாயின், தமிழ் என்றும் குறைவு படாது வளர்ச்சியுற்றோங்கும். இன்று தமிழரிடை ஏற்பட்டுள்ள நலிவுக்கும் தளர்ச்சிக்கும்கூட அத்தகைய பண்பு உயிர்ப்பும் ஊக்கமும் ஊட்டும் உயர் கற்பகமாய் அமையுமன்றோ? ஆதலின், அப்பண்பு யாதென ஆராய்ந்து, அது 'வாழ்க' என்று மந்திரம் முழக்கித் தமிழ்க்கும், தமிழர்க்கும் வாழ்த்துக் கூறுவோமாக.
தமிழின் தனிப்பண்பை இன்னொரு
வகையிலும்
தெற்றெனக் காணலாம். தமிழ்மொழி தமிழர்க்கு மட்டுமன்றித் தமிழ்க் குழுமொழிகள், பிற இந்திய மொழிகள், ஏன் உலக மொழிகள் அனைத்துக்குமே தனிப்பெரும் தாய் மொழியாகும் என மேலே கூறினோம். இங்ஙனம் காலத்தாலும், தோற்றத்தாலும் தமிழ்க்குப் பிற்பட்ட மொழிகளுள், எத்தனையோ இறந்துபட்டு விட்டன. எத்தனையோ பிள்ளையும், பிள்ளையின் பிள்ளையும் பெற்றும், எல்லாம் பல தலைமுறை வாழ்ந்தும் தாழ்ந்து ஒழிந்து கழிந்தன. அஃதேன்? உயர் இலக்கியம் பெறாததால் எனின், அன்று. உயர்தனிச் செம்மொழிகளான இலத்தீனும் கிரேக்கமும் இலக்கிய வளமற்றன அல்லவே? அவை இறந்து இரண்டாயிரம் ஆ ண்டுகள் ஆயிற்றே. ஏன்? மேலும், அவற்றுடனொத்த வடமொழியைப் பார்த்தால், அது தமிழன் கண்களுக்கு