பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




212) ||

அப்பாத்துரையம் - 1

முன்னாலேயே எத்தனை தலைமுறை வாழ்வு பெற்றுப் பிறந்து இறந்துவிட்டது! முதலில் தொல்காப்பியர் காலத்தை ஒட்டி இருந்த வேதமொழி திருந்திய மொழியான சமற்கிருதமாய்ப், பாளியாய், அப்பிரபஞ்சங்களாய்ப், பழந்தாய் மொழிகளாய், இந்தி முதலிய தற்காலத் தாய்மொழிகளாய் இன்று வாழ்வு பெறுகின்றது.வடமொழியின் இத்தனை தலைமுறைக்கும் தமிழ் ஒரே தலைமுறையாய் வாழ்ந்து இன்றும் உயிரோடிருப்பது மட்டுமன்று, இன்றும் வளர்ச்சி முற்றுப்பெறாது வளர்ச்சியின் வித்தை-மூல சத்தியை-இழக்காமல் கன்னித் தமிழாகவே இருக்கிறது.

தமிழின் இவ் இறவாத்தன்மை, தமிழர் நாகரிகத்தின் சமயத்தின் இவ்வுயிர், யாதென ஆராய்வோம்.

முதலில் தமிழ் பல மொழிகளுக்குத் தாயாயினும், தனக்குத் தாயாக எம்மொழியையும் கொள்ளாதது உற்று நோக்கத்தக்கது. இப்பண்பைத் தமிழின் தாய்மைப் பண்பு என்று கூறலாம்.

ம்முதல் தாய்மைப் பண்புக்குக் குறைவு வாராதவரை ஒரு மொழி அழியமுடியாது. தமிழ்க் குழுவிற்பட்ட பிறமொழி களாகிய தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலியவை இறந்துபடவில்லை யாயினும், தம் நிலை திரிந்து மாறின. இதற்குக் காரணம், அவை தம் மொழியல்லாத வடமொழியைச் சார்ந்து நிற்க முயன்றதனாலேயேயாம். இங்ஙனம் வடமொழிச் சார்பு முதன் முதலில் ஏற்பட்டபோது, இன்று தமிழ் நாட்டில் தமிழ்ப் பற்றுடையோர் அதனை எதிர்ப்பது போலவே, அந்நாடுகளிலும் அவ்வம் மொழியின் தாய்மொழிப் பற்றுடையோரும் எதிர்க்கவே செய்தனர். மலையாளத்தில் இத்தகைய காலத்தை ‘சம்பூக்காலம்’ என்றும் ‘மணிப்பிரவாள காலம்' என்றும் கூறுவர். இத்தகைய காலத்தில் சம்பூக்கள் என்ற அவியற் காவியங்கள் எழுதப்பட்டன. அவை காவியத்தையும், நாடகத்தையும், உரைநடையையும், செய்யுள்களையும் குழப்பிச் சேர்த்ததுபோல், தாய்மொழிச் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் சேர்த்துச், சில சமயம் வடமொழிச் சொற்களுக்குத் தென்மொழி இலக்கணத்தை யும், தென்மொழிச் சொற்களுக்கு வடமொழியிலக்கணத்தையும் பொருந்தா வண்ணம் பொருத்தி அமைக்க முயன்றன. அத்தகைய புதுப்பிறவிகள் நெடுநாள் வாழாதொழியவே, இனிப் பெருத்த